மோகன் லால் டு ரகுல் ப்ரீத்.. அம்மாவின் புகைப்படங்களை பகிர்ந்த பிரபலங்கள்.. #அன்னையர்தினம்

சென்னை: தாய்மார்களை கொண்டாடும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

கிட்டார் வாசித்து.. பாட்டு பாடி.. அட்வான்ஸ் அன்னையர் தின வாழ்த்து கூறிய.. மதன் பாபு குடும்பம்!

சாதாரண மனிதர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தங்களை ஈன்று, வளர்த்து, ஆளாக்கிய அம்மாவை இந்த நாளில் நினைத்து அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

#அன்னையர்தினம், #HappyMothersDay என பல ஹாஷ்டேக்குகளும் டிவிட்டரில் டிரெண்டாகி வரும் நிலையில், மோகன் லால், ரகுல் ப்ரீத் சிங், அஞ்சலி என பல பிரபலங்களும் தங்கள் அம்மாக்களின் புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மோகன் லால் வாழ்த்து

மோகன் லால் வாழ்த்து

இந்திய சினிமாவின் இணையில்லா நடிகராக வலம் வரும் மோகன் லால் தனது அம்மா சாந்தகுமாரி நாயரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஹேப்பி மதர்ஸ் டே என மலையாளத்தில் வாழ்த்தி உள்ளார். மோகன் லால் ரசிகர்கள் பலரும் அவரது அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கமெண்ட் செக்‌ஷனில் தெரிவித்து வருகின்றனர்.

விவேக் கவிதை

விவேக் கவிதை

"எல்லோரையும் தாங்குபவள் தாய். அந்தத் தாயையும் தாங்குபவள் நம் பூமித்தாய். அவள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்! அதற்கு நாமும் உதவ வேண்டும்! மரம் நடுவோம் ஏரி குளம் சுத்தம் செய்வோம்!(சமூக இடைவெளி காப்போம்!முகக்கவசம் அணிவோம்! ஊரடங்கு முடிந்த பின்னும்)" என தனது அம்மா மணியம்மாளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் விவேக் வாழ்த்து கவிதை வாசித்துள்ளார்.

அம்மாவுடன் நேஹா தூபியா

அம்மாவுடன் நேஹா தூபியா

இந்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வரும் நடிகை நேஹா தூபியா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நீங்கள் இல்லை என்றால் என் இதயம் துடிக்காது என ஆங்கிலத்தில் கவிதையும் கன்னத்தில் முத்தமும் கொடுத்து அசத்தி இருக்கிறார்.

லவ் யூ மா

லவ் யூ மா

கற்றது தமிழ், அங்காடித் தெரு, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்துள்ள நடிகை அஞ்சலி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, லவ் யூ மா என பதிவிட்டுள்ளார். நடிகை அஞ்சலியின் ரசிகர்கள் அவரது டிவீட்டுக்கு கீழே அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா வாழ்த்து

சமந்தா வாழ்த்து

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் புகைப்படத்தை ஷேர் செய்து ஹேப்பி மதர்ஸ் டே என அன்னையர் தினத்துக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். சமந்தா மற்றும் நாக சைத்தன்யாவின் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

ஊர்வசி ரவுத்தேலா

ஊர்வசி ரவுத்தேலா

தினம் தினம் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வரும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, இன்று தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு Happy Mothers Day என வாழ்த்து சொல்லியுள்ளார். வழக்கம் போல லட்சக் கணக்கில் ரசிகர்கள் லைக்குகளை தட்டி வருகின்றனர்.

அம்மாவுடன் பிரணிதா

அம்மாவுடன் பிரணிதா

சகுனி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நடிகை பிரணிதா இந்த லாக்டவுன் நேரத்தில் 75 ஆயிரத்திற்கும் மேலான நபர்களுக்கு உணவுகளை தினமும் சமைத்து, வழங்கி வருகிறார். அன்னையர் தினமான இன்று தனது அம்மாவுடன் கட்டியணைத்தபடி இருக்கும் அழகான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வால் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, எப்போதும் எனை வழிநடத்தி செல்லும் ஒரு முன்னோடியான பெண்ணுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என அசத்தலாக கேப்ஷன் கொடுத்துள்ளார். காஜல் அகர்வாலின் அம்மாவுக்கு குவிகிறது வாழ்த்துக்கள்.

இது உங்க நாள் அம்மா

இது உங்க நாள் அம்மா

தென்னிந்திய சினிமாவை மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் தனது அம்மாவுடன் இருக்கும் அசத்தலான புகைப்படத்தை ஷேர் செய்து இது உங்க நாள் அம்மா.. எனக்கு பின்னால் இருக்கும் எல்லா கதையும் எனது தாயின் கதை தான். அவர் தான் எனக்கு எல்லாமே என நீண்டதொரு பதிவை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X