twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோ-கேப் டெக்னாலஜி.. கோச்சடையான் சொதப்பல் டெடில இருக்காது.. நம்பிக்கை தரும் சக்தி செளந்தர் ராஜன்!

    |

    சென்னை: ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள டெடி படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் டெடி படம் குறித்தும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மோஷன் கேப்சர் டெக்னாலஜி குறித்தும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

    Recommended Video

    Arya Unbelievable Transformation | Salpetta | Pa. Ranjith

    இந்தியாவிலேயே, சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் தான் அதிகளவிலான மோஷன் கேப்சர் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது.

    ஆனால், அதை விட டெடி படத்தில் சிறப்பாக மோ-கேப் எனும் மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்காங்களாம்.

    மோஷன் கேப்சர் என்றால்?

    மோஷன் கேப்சர் என்றால்?

    அவதார் படத்தில் நாவி இன மக்களை மோஷன் கேப்சர் டெக்னாலாஜி மூலமாகத்தான் உருவாக்கினார்கள். பல ஹாலிவுட் படங்களிலும், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர்கள், செய்யும் உடல் அசைவுகளை கம்ப்யூட்டரில், பதிவு செய்து, அதற்கேற்ப ஒரு 2டி அல்லது 3டி உருவ அமைப்பை உருவாக்கி அதற்கு, இவர்களின் உடல் அசைவுகளை செலுத்தி, அவுட் புட் கொண்டு வருவதே மோஷன் கேப்சர் டெக்னாலஜி.

    ஷங்கர் படத்தில்

    ஷங்கர் படத்தில்

    மோஷன் கேப்சர் எனும் இந்த தொழில்நுட்பத்தை, ஜீன்ஸ் படத்தில் வரும் "கண்ணோடு காண்பதெல்லாம்" பாடலிலேயே இயக்குநர் ஷங்கர் அறிமுகம் செய்திருப்பார். இரண்டு ஐஸ்வர்யா ராய், ஒரே மேடையில், நடனமாடும் காட்சி, அந்த நேரத்தில் பிரமிப்பை உருவாக்கியது. 2.0 படத்திலும், இந்த தொழில்நுட்பத்தை ஷங்கர் பயன்படுத்தி உள்ளார்.

    சொதப்பியது

    சொதப்பியது

    செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ரஜினியின் கோச்சடையான், படம், முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜியுடன் உருவான முதல் இந்திய படம் என்ற பயங்கர பில்டப்புடன் வெளியானது. ஆனால், அந்த படம் வெறும் சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன் சேனல் பொம்மை படம் போல் வெளியானதால், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

    ஆர்யாவின் டெடி

    ஆர்யாவின் டெடி

    ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படம், லோ பட்ஜெட்டில், நல்ல ஒரு ஸ்பேஸ் படமாக வெளியாகி, மாபெரும் ஹிட்டும் அடித்தது. இந்நிலையில், இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் தனது அடுத்த முயற்சியாக ஆர்யா நடிப்பில், டெடி எனும் படத்தை உருவாக்கி உள்ளார். இதில், அனிமேஷன் கரடி முழு படத்திலும் பயணிக்கவுள்ளது.

    80 நிமிஷம்

    80 நிமிஷம்

    மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துடன் மிகவும் நுணுக்கமாக உருவாகி உள்ள டெடி படத்தில் வரும் டெடி பியர் பொம்மை, கிட்டத்தட்ட 80 நிமிஷம் மோஷன் கிராபிக்ஸ் உதவியுடன் ரசிகர்களை கவர உள்ளதாகவும், நிச்சயம் அந்த டெடி, அனிமேஷன் பொம்மையை விட, உயிருள்ள ஒரு கதாபாத்திரமாகவே திரையில் வந்து, ரசிகர்களை கவரும் என சக்தி தெரிவித்துள்ளார்.

    English summary
    Unlike the Rajinikanth-starrer, ours isn’t an animated movie. The technology has been used only for one particular character.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X