அஜித்தின் 'வலிமை'யில் மிரட்டும் கார் ரேஸ், தெறிக்கும் பைக் ரேஸ்... சுவிட்சர்லாந்தில் ஷூட்டிங்காமே?
Recommended Video
சென்னை: அஜித்தின் வலிமை படத்தில் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம், நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது.
இந்தியில், அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித்.

காவல்துறை அதிகாரி
'நேர்கொண்ட பார்வை'யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அஜித், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது.

ஹெலிகாப்டர் ட்ரோன்
அது முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இங்கு அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் போலீசாருடன் ஹெலிகாப்டர் ட்ரோனை இயக்கியபடி அஜித் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அது முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இங்கு அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் போலீசாருடன் ஹெலிகாப்டர் ட்ரோனை இயக்கியபடி அஜித் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

ஹூமா குரேஸி
இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே அஜித்தின் பில்லா 2 படத்தில் நடிக்க இருந்தவர்.

பைக், கார் ரேஸ்
இந்நிலையில், இந்தப் படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் இருக்கின்றன. இந்தக் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக, தயாரிப்பாளர் போனிகபூர் சிறப்பு அனுமதி வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை ஷெட்யூலை முடித்துவிட்டு படக்குழு வட இந்தியாவில் சில காட்சிகளை படமாக்குகிறது. பின்னர் ஏப்ரல் மாதம் இந்த சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











