ஜோயாவை தொட்டு தொட்டு பேசுறாங்க..பார்க்கவே வருத்தமா இருக்கு.. டிடிஎஃப் வாசன் வேதனை!

சென்னை: சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வருபவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் சாகசம் செய்து வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் பிரபலமானார். இவரின் தோழியான ஷாலின் சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நிலையில், தனது வீடியோவில் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த வைகுந்த வாசன் இருசக்கர வாகன நீண்ட தூரம் பயணம் செய்து யூட்யூபில் பிரபலமானார். யூட்யூபில் 40 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் வைத்து இருக்கும் வாசனுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Motorbike racer TTF vasan feels sad for his friend Shaalin Zoya

ஏராளமான ரசிகர்கள்: டிடி எப் வாசன் கடந்த ஆண்டு சென்னையிலிருந்து கோவை செல்லும்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லீவிங் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி இவரது வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கையில் காயம் காயமடைந்தார்.விபத்தில் கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவர், பைக் ரைடுக்கான உடை அணிந்து இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஓட்டுநர் உரிமை ரத்து: இதுகுறித்து வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் அவரின் பைக்கை ஏன் எரிக்கக்கூடாது என காட்டமாக விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. தற்போது வாசன் தனது யூடியூப் சேனலில் தனது பைக் கடை குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Motorbike racer TTF vasan feels sad for his friend Shaalin Zoya

கஷ்டமா இருக்கு: இந்நிலையில் இவரின் தோழியான ஷாலின் சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பாவி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக இருக்கிறார். டிடிஎப் வாசனும், சோயாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியானது. இதனால், இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்களா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் அது குறித்து டிடிஎஃப் வாசனும் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தனர்.

ஆனால், தற்போது வாசன், தனது வீடியோவில், ஜோயா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்லும் போதே இர்பான் மற்றும் அவளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனால், புகழ் அண்ணா தொட்டு பேசுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று டிடிஎப் வாசன் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X