10 வருஷத்துக்கு பைக் ஓட்ட முடியாது.. கொஞ்சம் கூட நியாயமே இல்ல.. டிடிஎஃப் வாசன் பேட்டி!
சென்னை: 10 வருஷத்துக்கு பைக் ஓட்டக்கூடாது என்பது கொஞ்சம் கூட நியாயமே இல்ல என்று சிறையில் இருந்து வெளியான டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த வைகுந்த வாசன் இருசக்கர வாகன நீண்ட தூரம் பயணம் செய்து யூடியூபில் பிரபலமானார்.
யூடியூபில் 40 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் வைத்து இருக்கும் வாசனுக்கு சிறுவர்கள் பெரியவர்கள் வரை ஏராளமான பேன்ஸ் உள்ளனர்.
சாலை விபத்தில் சிக்கினார்: டிடி எப் வாசன் கடந்த மாதம் சென்னையிலிருந்து கோவை செல்லும்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லீவிங் செய்ய முயற்சிக்கும் போது நிலை தடுமாறி இவரது வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் அடுத்த மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புழல் சிறையில்: விபத்தில் கிழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவர் ரைக் ரைடுக்கான உடை அணிந்து இருந்ததால், அதிர்ஷ் வசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் நேற்றைய தினம் அவரைக் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில், இதையடுத்து சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நியாயமே இல்ல: இந்நிலையில், ஜாமினில் விடுதலையான டிடிஎஃப் வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். பைக்தான் என்னுடைய லைஃப்பே. என்னுடைய பேஷனைத்தான் என்னுடைய தொழிலாகவே மாற்றி இருக்கிறேன். அதற்காகவே என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறேன். அப்படி இருக்கும் போது இந்த விஷயத்தில் 10 வருடம் என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருப்பது நியாயமே இல்ல.

இது என்னை திருத்த வேண்டும் என்று செய்தது போல் இல்லை. என்னுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று செய்தது போல இருக்கிறது. ஆனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. என்னைப்பற்றி கொடுத்த புகாரே தவறாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











