சன்னி லியோன்னு நினைச்சு.. தர்ஷா குப்தா கன்னத்தை கிள்ளிய மொட்டை ராஜேந்திரன்.. செம பிராங்க்!
சென்னை: சன்னி லியோன் நடித்து வரும் தமிழ் படத்தில் தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ஜிபி முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
Recommended Video
ஓ மை கோஸ்ட் எனும் டைட்டிலில் ஹாரர் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் மொட்டை ராஜேந்திரனிடம் தங்க துரை பண்ண பிராங்க் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழில் சன்னி லியோன்
பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் ஓ மை கோஸ்ட் எனும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், பழைய ஜோக் தங்கதுரை, ஜிபி முத்து உள்ளிட்ட ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சன்னி லியோன் பேயாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொட்டை ராஜேந்தர் ஆர்வம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் மொட்டை ராஜேந்திரனை கலாய்க்க பழைய ஜோக் தங்கதுரை பண்ண பிராங்க் வீடியோவில் வசமாக மொட்டை ராஜேந்திரன் சிக்கியது போல உருவாக்கப்பட்ட வீடியோ யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. சன்னி லியோனை சந்திக்க மொட்டை ராஜேந்திரன் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்பது அந்த வீடியோவை பார்த்தால் தெரியும்.

சன்னி லியோனாக மாறிய தர்ஷா குப்தா
மொட்டை ராஜேந்திரன் கேரவனில் இருந்து இறங்கி சன்னி லியோன் கேரவனுக்கு கூட்டி செல்வதாக தர்ஷா குப்தா கேரவனுக்கு பழைய ஜோக் தங்கதுரை கூட்டிச் செல்ல தர்ஷா குப்தாவை பார்த்து சந்தேகப்படும் மொட்டை ராஜேந்திரனை மறுபடி மறுபடி ஏமாற்றுகிறார் பழைய ஜோக் தங்கதுரை.

கன்னத்தை கிள்ளிய மொட்டை ராஜேந்திரன்
சன்னி லியோனிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என மொட்டை ராஜேந்திரனிடம் தங்க துரை பிரைன் வாஷ் பண்ண அவரும் இந்தியில் பேசுவது போல சில பல இந்தி பட வசனங்களை பேசி தர்ஷா குப்தாவின் அழகில் மயங்கி சன்னி லியோன் கன்னத்தை கிள்ளுவது போல தர்ஷா குப்தா கன்னத்தை கிள்ள தர்ஷா குப்தா சென்னை ஸ்லாங்கில் மொட்டை ராஜேந்திரனை கழுவி ஊற்ற இது பிராங்க் என சொல்லி முடிக்கின்றனர். இந்த வீடியோவை நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











