மொட்டை ராஜேந்திரன் இரட்டைவேடத்தில் நடிக்கும் டைம் அப்!

சென்னை : கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்று விடுமுறை நாட்கள் தொடர்ந்து வர பல திரைப்படங்கள் ரிலீசுக்காக வரிசை கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கின்றன.

அதில் ஒன்று தான், 'டைம் அப்' குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படியான, குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாலியான அனுபவத்தை தரக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது 'டைம் அப்.'

எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் மனு பார்த்திபன். நடிகராகவும் இயக்குநராகவும் இவருக்கு இது முதல் படம்.

காமெடிக்கு பஞ்சமில்லை

காமெடிக்கு பஞ்சமில்லை

கதாநாயகியாக மோனிகா சின்ன கொட்லா நடிக்க, மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர், சூப்பர் குட் சுப்ரமணி, 'ஆதித்யா' கதிர், 'பிஜிலி' ரமேஷ் என காமெடிக்கு கேரண்டி தரக்கூடிய பலரும் நடித்திருக்கிறார்கள்.

பேண்டஸி படம்

பேண்டஸி படம்

இப்படம் குறித்து மனு பார்த்திபன் கூறுகையில், ''பேண்டஸி காமெடி ஜானர்ல ரசிகர்கள் ஜாலியா சிரிச்சு ரசிக்கிற மாதிரியான படமா உருவாக்கியிருக்கோம். படத்தோட ஹீரோ தீவிர கமல் ரசிகன். அவன் ஒரு சாமியாரை பகைச்சுக்கிறான். அது தெய்வகுத்தமாகி 30 நாள்ல அவன் இறந்துடுவான்ங்கிற சூழ்நிலை. அந்த சூழ்நிலையிலேருந்து, அதாவது எமன்கிட்டேயிருந்து எப்படி தப்பிக்கிறான்கிறதுதான் கதை என்று விவரித்துள்ளார் .

டபுள் ஆக்ஷன்

டபுள் ஆக்ஷன்

முதன்முறையா 'மொட்டை' ராஜேந்திரன் டபுள் ஆக்ஷன்ல நடிச்சிருக்கார். ஹீரோ மாதிரியும், வில்லன் மாதிரியும் வருவார். அவரு மாடர்ன் எமனா வந்து பண்ற கலாட்டாவெல்லாம் ரகளையா இருக்கும். இன்னொரு கெட்டப்புலயும் மனுஷன் அட்ராசிடி பண்ணிருக்கார். குழந்தைகள் செமையா ரசிப்பாங்க'' என்றார்.

செம ட்ரீட்

செம ட்ரீட்

இப்படத்தின் எழுத்து, இயக்கம் - மனு பார்த்தீபன்,பின்னணி இசை - தீபன் சக்ரவர்த்தி,பாடல்கள் இசை - எல்.ஜி. பாலா,ஒளிப்பதிவு - கனிராஜன், எடிட்டிங் - ஸ்ரீவத்ஸன், நிரஞ்சன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X