»   »  மொட்ட சிவா கெட்ட சிவா.... சர்ச்சைக்கு மத்தியிலும் செம ஓபனிங்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்!

மொட்ட சிவா கெட்ட சிவா.... சர்ச்சைக்கு மத்தியிலும் செம ஓபனிங்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மக்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சை, இயக்குநர் மன்னிப்பு என ஏக சர்ச்சைகளுக்கு மத்தியிலும் மொட்ட சிவா கெட்ட சிவா படம் பெரிய ஹிட்டாகியுள்ளதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பல முறை தேதி அறிவிக்கப்பட்டும், ரிலீசாகாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த மொட்ட சிவா கெட்ட சிவா, தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சி காரணமாக நேற்று முன் தினம் வெற்றிகரமாக ரிலீசானது.

Motta Siva Ketta Siva gets big opening

ஆனால் வெளியான கையோடு மக்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் சிக்கியது. ஆனால் அதை முதல் நாளே உஷாராகத் தீர்த்து வைத்துவிட்டார் ராகவா லாரன்ஸ். உலகில் ஒரே சூப்பர் ஸ்டார் என் தலைவர் ரஜினிதான் என அவர் சொன்னதும், அடுத்து படத்தின் இயக்குநர் ஆர்வக் கோளாறால் இப்படிச் செய்துவிட்டேன், மன்னிச்சிடுங்க எனக் கேட்டதும் ரசிகர்களின் சூட்டைத் தணித்தது. ஒரு வகையில் இந்த சர்ச்சை படத்தின் விளம்பரத்துக்கு பெரிதும் உதவியது என்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில்.

இது ஒருபுறமிருக்க, படத்துக்கான வரவேற்பு நன்றாகவே உள்ளது. படம் வெளியான வியாழக்கிழமை வார வேலை நாள். ஆனால் அன்றும் அனைத்து அரங்குகளுமே கிட்டத்தட்ட ஹவுஸ்புல். நேற்று வெள்ளி மற்றும் இன்று சனிக்கிழமை ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருப்பதில் தயாரிப்பாளர்களுக்கு ஏக திருப்தி. அதன் விளைவு, இன்று மாஸ் ஹிட் என அறிவித்து விளம்பரம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

நாளைக்கு சக்ஸஸ் மீட்டா லாரன்ஸ்?

English summary
Motta Siva Ketta Siva is getting big opening amidst Makkal Superstar controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil