Revathi: மனசே கஷ்டமா இருக்கு.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரேவதி!

சென்னை: என்பது கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக நம் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரேவதி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் துணிச்சலோடு நடித்து பெயர் எடுத்த நடிகை ரேவதி, இன்றும் தனது கேரியரை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். தற்போது நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பொத்திவெச்ச மல்லிகை மொட்டு... பூத்திருச்சு வெக்கத்த விட்டு.. என மண்வாசனை படத்தில் கிராமத்து பெண்ணாக வரும் ரேவதியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது. முதல் படத்திலேயே அழுத்தமான ரோலில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்த நடிகை ரேவதி மண்வாசனை படத்தை தொடர்ந்து, கை கொடுக்கும் கை, புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள், உன்னை நான் சந்தித்தேன், போன்ற பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

revathi photos

நடிகை ரேவதி: அதவும் குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான மௌன ராகம் படத்தில், அவரின் குறும்புத்தனமான நடிப்பால்,பலர் இவரின் தீவிர ரசிகரானார்கள். இந்த படத்திற்கு பின் கார்த்திக், ரேவதி, மோகன் காமினேஷனில் பலத்திரைப்படங்கள் வெளியானது. இவர் கமலஹாசன், ரஜினிகாந்த், பிரபு, மோகன், விஜயகாந்த் என்று அப்போது முன்னணி நடிகர்களாக இருந்து வந்த பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

revathi photos

காதல் திருமணம்: 1988 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து, நடிகை ரேவதி தனது 47 வயதில் டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். . அந்த குழந்தைக்கு மகி என பெயர்வைத்துள்ளார். அந்த குழந்தையை கேமராவில் சிக்கிவிடாமல் பாதுகாத்து வளர்த்து வருகிறார்.

revathi photos

ரேவதியா இது: அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகை ரேவதி தற்போது, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்காக வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், நடிகை ரேவதி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மொத்தமாக மாறி உள்ளார். வயதாகி தலைமுடி நரைத்த போதும், அதற்கு கலர் பூசிக்கொள்ளாமல் எதார்த்தமாக இருக்கிறார். இருந்தாலும் இவரை இப்படிப் பார்த்த இவரது,அந்த காலத்து ரசிகர்கள் ரேவதியா இது என கேட்டு வருகின்றனர்.

revathi photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X