Serial actress Raveena : இவரைத்தான் காதலிக்கிறாரா ரவீனா.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் கேள்வி!
சென்னை : சீரியல் நடிகை ரவீனா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவால் அவர் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் நடிகை ரவீனா டாகா.
இவர் டீன் ஏஜை எட்டியவுடன் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் நடிகையாக மாறினார்.

நடிகை ரவீனா : தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த ரவீனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடித்தார். அதன் பிறகு தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான மௌன ராகம் சீரியலில் லீட் ரோலில் நடித்தார்.
மௌன ராகம் சீரியல் : மௌன ராகம் சீரியலின் முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் சில புதுமுக நடிகர்களுடன் ஒளிபரப்பானது. இதில், ரவீனா சக்தி என்ற கதாபாத்திரத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். ஜில்லா, ராட்சசன் படத்தில் குட்டி பெண்ணாக இருந்த ரவீனா இந்த சீரியலில் புடவையை கட்டிக்கொண்டு அழகு தேவதையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

குக் வித் கோமாளி : சீரியலில் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த ரவீனா, அனைவரும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்து வருகிறார். கோமாளிகள் வழக்கமாக விதவிதமான கெட்டப்பில் வந்து அசத்துவார்கள் அந்த வகையில் கடந்த வாரம் இவர், விசித்திரா போல கெட்டப் போட்டிருந்தார். அது அவருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது.
இணையத்தில் ஆக்டிவ் : இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் முழு ஈடுபாடுடன் இருக்கும் ரவீனா நடனம் மீதுள்ள பிரியத்தால் அவ்வப்போது டான்ஸ் ஆடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல் ரவீனா பிரபல நடன கலைஞர் மணி சந்திராவுடன் அவ்வப்போது நிறைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

வாழ்த்துக்கள் செல்லம் : இந்நிலையில் மணி சந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் என்று போட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஒருவேளை அப்படி இருக்குமோ என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் இருவரும் காதலிக்கிறார்களா என சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











