Just In
- 5 min ago
கடின உழைப்பின் பலன் படத்தில் தெரியும் அண்ணே.. பிகில் கதிர்!
- 11 min ago
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அசத்தலாய் பங்கேற்ற நடிகர் விஜய்.. யாருடையதுன்னு பாருங்க!
- 1 hr ago
ஆமா...அது உண்மைதாங்க... த்ரிஷா விஷயத்தை உறுதி செய்த டைரக்டர்!
- 1 hr ago
என் புருஷனுக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு.. முதல் முறையாக வாய் திறந்த மகாலக்ஷ்மி!
Don't Miss!
- News
சென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
- Automobiles
தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன
- Finance
சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்
மும்பை: துபாய் காதலர் குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார் நடிகை மௌனி ராய்.
நாகினி என்ற ஒரே சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எனவே சீரியல்களில் நடிப்பதில்லை.
மௌனி ராய் நடித்த 'மேட் இன் சைனா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த படம் வசூல் ரீதியாக பெரிதாக கைக்கொடுக்கவில்லை.

துபாய் காதலர்
இந்நிலையில் துபாய் நாட்டை சேர்ந்த வங்கியாளர் சூரஜ் நம்பியார் என்பவரை மௌனி ராய் காதலிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நான் சிங்கிள் தான்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, " நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் இப்போது சிங்கிள் தான். இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி பரவுகிறது என்பதே எனக்கு புரியவில்லை. மற்றவர்களை போல என்னையும் ஆண் நண்பர்கள் வைத்துக்கொள்ள அனுமதியுங்கள். ஆண் நண்பர்களுடன் நான் நேரம் செலவழித்தால், உடனே அது காதலாகிவிடாது.

திருமணத்துக்கு அவசரமில்லை
எனக்கு பிடித்த மாதிரியான நபரை நான் பார்க்கும் போது, நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். எல்லோருக்கும் தெரிவித்து ஊரைக்கூட்டி தான் திருமணம் செய்துகொள்வேன். என்னை திருமணம் செய்து கொள்ளும்படி எனது குடும்பத்தினர் யாரும் நிர்பந்திக்கவில்லை. எனக்கு எந்த அவசரமும் இல்லை", என மௌனி ராய் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வந்த கிசுகிசு
ஏற்கனவே நடிகர் மோஹித் ரெய்னாவை மௌனி ராய் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து இருவருமே வாய்த்திறக்கவில்லை. அந்த தகவலை இருவருமே மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் சூரஜ் நம்பியார் உடனான காதல் கிசுகிசுவை மறுத்துள்ளார் மௌனி ராய்.

மௌனி ராயின் நம்பிக்கை
படங்களை பொறுத்தவரை மிக அதிகமான பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகிவரும் பிரமாஸ்த்ரா படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் மௌனி. இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் மௌனி ராய்.