Don't Miss!
- News
"கேங்மேன்" பணிகள்.. திருநங்கைகளுக்காக முதன் முறையாக விதிகளை தளர்த்திய இந்திய ரயில்வே.. சூப்பர்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஊருக்குத் திரும்ப துடிச்சுட்டு இருக்கேன், முடியலையே.. அபுதாபியில் சிக்கிக்கொண்ட நடிகை வருத்தம்!
மும்பை: இந்தியாவுக்கு இன்னும் திரும்ப முடியவில்லை என்று பிரபல நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாகினி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மெளனி ராய். இந்த தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், இவரும் ஒருவர். அக்ஷய் குமாரின் கோல்டு படத்தில் நடித்த இவர், யஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
400 படங்களுக்கு மேல் நடித்த.. பிரபல பாலிவுட் காமெடி நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!

நெகட்டிவ் கேரக்டர்
அடுத்து, மேட் இன் சைனா படத்தில் நடித்தார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா உட்பட பலர் நடிக்கின்றனர். சூப்பர் ஹீரோ படமான இதை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் மெளனி ராய்.

ஷூட்டிங் தடை
'மொகுல்' படத்தில் ஆமிர்கான் ஹீரோவாக நடிக்கிறார். மெளனி ராய் ஹீரோயினாக நடிக்கிறார். சுபாஷ் கபூர் இயக்குகிறார். லாக்டவுன் காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இதற்கிடையே உலகையே மிரட்டும் கொரோனா காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் போட்டோஷூட் ஒன்றுக்காக, லாக்டவுனுக்கு முன் அபுதாபி சென்ற நடிகை மெளனி ராய் அங்கு சிக்கிக் கொண்டார்.

மூன்று மாதங்கள்
சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. கடந்த 3 மாதங்களாக அங்கு இருக்கும் அவர், ஊருக்குத் திரும்புவதற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை என்று கூறியிருக்கிறார் அவர். இதுபற்றி அவர் இப்போது அளித்துள்ள பேட்டியில், அபுதாபியில், என் ஃபிரண்ட் வீட்டில் இருக்கிறேன். இங்கு இருப்பதில் மகிழ்ச்சிதான்.

இந்தியா திரும்ப
இருந்தாலும் என் அம்மாவையும் சகோதரரையும் பார்க்க முடியவில்லை என்கிற கவலை இருக்கிறது. அவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹரில் இருக்கிறார்கள். போனில் பேசிக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்தியா திரும்புவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் பயணம் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை. விரைவில் திரும்பி விடுவேன் என்று நினைக்கிறேன்.
Recommended Video

வெளியே செல்லவில்லை
தோழியின் குடும்பத்தினர்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக நான் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. காய்கறி, மளிகை சாமான்கள் வாங்குவதற்கு மட்டும் ஒரிரு முறை வெளியே சென்றேன். மற்றபடி எங்கும் செல்லவில்லை. இந்த கடினமான நேரத்தை எனது சமையல் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ஆன்லைன் பகவத் கீதை வகுப்புகளில் பங்குபெறவும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.