ஆச்சரியமா இருக்கே, கருப்பு இவங்களுக்கு சிறப்பாம்ல.. நெட் டிரெஸ்சில் தாறுமாறாக மிரட்டும் நடிகை!
சென்னை: பிரபல நடிகை கருப்பு டிரெஸ்சில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர், மெளினி ராய்.
தனது விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இவர்.

ஸ்பெஷல் போட்டோ
இதற்காக ஸ்பெஷல் போட்டோகிராபரையும் வைத்திருக்கிறாரோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அவர் இன்ஸ்டா கணக்கு போட்டோக்களால் நிறைந்திருக்கிறது. இன்ஸ்டாவில் அதிக பாலோயர்களை கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஒரு போட்டோ பதிவிட்டாலே, லட்சக்கணக்கான லைக்ஸ், சாதாரணமாகக் கிடைக்கிறது.

மெளனி மகத்துவம்
இதுதான் மெளனி ராயின் மகத்துவம். 'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ரசிகர்களைப் பெற்றவர், இவர். பாடகி, கதக் நடனக் கலைஞர் என ஏகப்பட்ட திறமைகளை தனது தகுதியாக வைத்திருக்கிறார், இந்த நடிகை!

ஒரு பாடலுக்கு
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மெளனி, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்தியில், ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். யஷ் நடித்து ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

கான்ஃபிடன்ஷியல்
இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா சூப்பர் ஹீரோ கதையை கொண்டது. அவர் நடித்த, லண்டன் கான்ஃபிடன்ஷியல் என்ற படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது. லாக்டவுனுக்கு முன் அபுதாபி சென்றதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர் அங்கு சிக்கிக் கொண்டதும் பழைய கதை.

என்னாச்சு இவருக்கு
கடந்த சில நாட்களாக, ஹோம்லி லுக் ஸ்டில்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்த அவர் இப்போது, கிளாமர் ஸ்டில்களை பதிவிட்டு வருகிறார். இதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். சில நெட்டிசன்ஸ், திடீர்னு என்னாச்சு இவருக்கு என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தத்துவ கேப்ஷன்
இந்நிலையில் இப்போது கருப்பு நிற டூ பீஸ் மற்றும் நெட் உடை அணிந்து, செம கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதற்கு கேப்ஷனாக தத்துவம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், நான் வெற்றிபெற்றவர்களாக இருந்தால், சமூகத்தில் சிறப்பான இடத்தை அடைந்தால், எல்லோரும் நம்மை நேசித்தால், நான் மகிழ்ச்சியாக இருப்போம் என நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

நமக்கான மகிழ்ச்சி
ஆனால், அதில் உண்மையில்லை. நாம் யார், நமக்கான மகிழ்ச்சி எது என்பதை அறிவதற்கான பயணம்தான் முக்கியமானது. உங்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள் என்று கூறியுள்ளார், மெளினி ராய். இதற்கு நடிகர், நடிகைகளில் இருந்து ஏராளமானோர் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

நீங்கதான் பேரழகி
பலர் , வாவ், அருமை, செம, நீங்கதான் பேரழகி என்பது போல கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளனர். கருப்பு டிரெஸ் உங்களுக்கு மட்டும் எப்போதும் ஸ்பெஷலா இருக்கு என்றும் உங்கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம் என்றும் சிலர் கூறியுள்ளார். மெளனி ராயின் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











