நாகராணியாச்சே.. கையில் தேங்காயுடன் அச்சச்சோ செல்ஃபி.. பிரபல நடிகையின் பிகினியாட்டம்.. வைரல் வீடியோ!

By

சென்னை: பிரபல நடிகை கையில் தேங்காயை வைத்துக்கொண்டு, பிகினியில் எடுத்துள்ள செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது.

'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் எக்கச்சக்க ரசிகர்களை பெற்றவர், மெளனி ராய்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

சூப்பர் ஹீரோ கதை

சூப்பர் ஹீரோ கதை

இந்தி நடிகையான இவர், ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கரண் ஜோஹர் தயாரிக்கும் படமான, பிரம்மாஸ்திரா சூப்பர் ஹீரோ கதையை கொண்டது.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார் மெளனி ராய். படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். கடைசியாக அவர் நடித்த, லண்டன் கான்ஃபிடன்ஷியல் என்ற படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது. லாக்டவுனுக்கு முன் போட்டோஷூட் ஒன்றுக்காக, அபுதாபி சென்றவர்
அங்கு சிக்கிக் கொண்டார்.

விளம்பர படப்பிடிப்பு

விளம்பர படப்பிடிப்பு

சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. பின்னர் நான்கு மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்து விளம்பர படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார். அடிக்கடி புகைப்படங்கள் உள்ளிட்ட விஷயங்களை வெளியிட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

மாலத்தீவில் ஜாலி

மாலத்தீவில் ஜாலி

அவருக்கு இன்ஸ்டாகிராமில் 13.7 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும், மெளனி ராய், கடந்த சில நாட்களுக்கு முன் மாலத்தீவு சென்றிருக்கிறார் சகோதரியுடன். தனது பிறந்த நாளை அங்கு கொண்டாடினார்.

நெட்டிசன்ஸ் கலாய்

நெட்டிசன்ஸ் கலாய்

இதையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த மெளனி ராய், ராஜ் நாயக் என்பவருக்கு நன்றி சொல்வதற்கு பதிலாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நெட்டிசன்ஸ் கலாய்த்தனர்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

இந்நிலையில் இப்போது பிகினி உடையில், ஒரு கையில் தேங்காயை பிடித்தபடி மறுகையால் செஃபி வீடியோ எடுத்துள்ளார். டூ பீஸ் உடையில் கிளாமராக இருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். மகா நாகராணியாச்சே என்று ஆச்சரியமாக கூறியுள்ள சிலர், கையில எதுக்கு அந்த தேங்காய்? என்று கேட்டுள்ளனர்.

Recommended Video

Actress Kajal Agarwal: ஏகப்பட்ட லைக்ஸ் வாங்கிய மேக்கப் இல்லாத புகைப்படம்
காண்பிக்கிறீங்க?

காண்பிக்கிறீங்க?

உங்கள் புன்னகை எங்களை மகிழ்ச்சியாக்குகிறது என்று சிலரும் உங்கள் அழகு நாளுக்கு மெருகேறிகிட்டே போகுதுஎன்று சிலர் கூறியுள்ளனர். ஒரு நெட்டிசன், ஏன் பிகினியை அடிக்கடி காண்பிச்சுட்டே இருக்கீங்க? என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X