இந்த 'நாகினி'க்கு வந்த வாழ்வைப் பாரேன்: வயித்தெரிச்சலில் சக நடிகைகள்
Recommended Video

மும்பை: நாகினியாக நடித்து பிரபலமான மவுனி ராய்க்கு கிடைத்துள்ள பட வாய்ப்பை பார்த்து சக நடிகைகள் பொறாமைப்படுகிறார்கள்.
நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் மவுனி ராய். தமிழகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நாகினி தொடரில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மவுனி ராயை மாற்றியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் பாலிவுட்டில் பிசியாகியுள்ளார் மவுனி ராய்.

பிரபுதேவா
சல்மான் கானை வைத்து தபாங் 3 படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இந்த படத்தின் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா. இந்நிலையில் படத்தில் மவுனி ராயும் இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சல்மான் கான்
சல்மான் கானிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார் மவுனி ராய். அதனால் சல்மான் மவுனி ராயை பாலிவுட் இயக்குனர்களிடம் பரிந்துரை செய்து வருகிறார். இந்நிலையில் தனது படத்திலேயே நடிக்க வைக்கிறார்.

கவுரவத் தோற்றம்
தபாங் 3 படத்தில் பிளாஷ்பேக்கில் சல்மான் கானின் காதலியாக வருகிறாராம் மவுனி ராய். 15 முதல் 20 நிமிடங்கள் தான் அவர் நடிக்கும் காட்சிகள் உள்ளதாம். கவுரவத் தோற்றம் என்றாலும் சல்மான் படமாச்சே அதனால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார் மவுனி ராய்.

பிரம்மாஸ்திரா
அக்ஷய் குமாரின் கோல்டு, ரன்பிர் கபூரின் பிரம்மாஸ்திரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் மவுனி ராய். சல்மான் கானால் மவுனி ராய்க்கு பட வாய்ப்புகள் வருவதை பார்த்து பிற நடிகைகள் அவர் மீது கடுப்பில் உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications