இதுவும் கவர்ச்சிதான்.. சேலையில் திணறடிக்கும் பிரபல ஹீரோயின்.. அப்படி வாழ்த்தும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை சேலையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தியில் ஒளிபரப்பாகும் நாகினி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மெளனி ராய்.

இந்த தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், இந்திய அளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

மேட் இன் சைனா

மேட் இன் சைனா

சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், இவரும் ஒருவர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமான மெளனி, அக்‌ஷய் குமாரின் கோல்டு படத்தில் நடித்தார். யஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தொடர்ந்து மேட் இன் சைனா படத்தில் நடித்திருந்தார்.

பெருந்தலைகள்

பெருந்தலைகள்

இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா போன்ற பெருந்தலைகள் நடிக்கிறார்கள். சூப்பர் ஹீரோ படமான இதை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் மெளனி ராய்.

ஆக்ட்டிவ் நடிகைகள்

ஆக்ட்டிவ் நடிகைகள்

'மொகுல்' படத்தில் ஆமிர்கான் ஹீரோ. மெளனி ராய் நாயகியாக நடிக்கிறார். சுபாஷ் கபூர் இயக்குகிறார். லாக்டவுன் காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில், மெளினி ராய்க்கு கொடுக்கலாம் முதலிடம்.

கிறங்கடிக்கும் மெளனி

கிறங்கடிக்கும் மெளனி

அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பவர் அவர். சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த அவ அங்கிருந்து வெளியிட்ட போட்டோஸ், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஏராளமானவர்கள் அதை ஷேர் செய்திருந்தனர்.

தொப்புள் ரிங்

தொப்புள் ரிங்

இந்நிலையில், இப்போது சேலை கட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தொப்புள் தெரிய அவர் எடுத்துள்ள இந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன. தொப்புளில் அவர் ரிங் அணிந்துள்ளார். அதை சில நெட்டிசன்ஸ் கிண்டலடித்துள்ளனர்.

அப்படி உணர்கிறேன்

அப்படி உணர்கிறேன்

இந்தப் புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, சேலையில் நான் அழகாக இருப்பதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார், மவுனி ராய். இதற்கு ஏராளமான நெட்டிசன்ஸ் லைக்ஸ்களை குவித்துள்ளனர். எக்கச்சக்க கமென்ட்களும் வந்து விழுந்துள்ளன. பலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

Recommended Video

சான்டாவாக மாறிய ’நாகினி’ மெளனி ராய்.. என்ன செஞ்சாரு தெரியுமா?
டேட்டிங் கோரிக்கை

டேட்டிங் கோரிக்கை

சேலை உங்களை விட வேறு யாருக்கு அம்சமா பொருந்தும்? என்று சில ரசிகர்கள் கேட்டுள்ளனர். நீங்க சும்மாவே அழகு, சேலையில மிரட்டல் அழகு என்று சிலர் வர்ணித்துள்ளனர். பலர் அவருக்கு டேட்டிங் கோரிக்கை வைத்துள்ளனர். சில ரசிகர்கள், ஒரே ஒரு ஹாய் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X