டாட்டா, கிளம்பியாச்சு.. லாக்டவுனால் வெளிநாட்டில் 4 மாதமாக சிக்கிய பிரபல நடிகை.. பிளைட் பிடித்தார்!

By

சென்னை: அபுதாபியில் கடந்த 4 மாதமாகச் சிக்கிக்கொண்டிருந்த பிரபல நடிகை அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மெளனி ராய். இந்த தொடர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், இவரும் ஒருவர். யஷ் நடித்து சூப்பர் ஹிட்டான கே.ஜி.எஃப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

அடுத்து, மேட் இன் சைனா படத்தில் நடித்தார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார். சூப்பர் ஹீரோ படமான இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் மெளனி ராய். அயன் முகர்ஜி இயக்குகிறார். லாக்டவுன் காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

திட்டத்தில் மாற்றம்

திட்டத்தில் மாற்றம்

இந்நிலையில் போட்டோஷூட் ஒன்றுக்காக, லாக்டவுனுக்கு முன் அபுதாபி சென்ற நடிகை மெளனி ராய், அங்கேயே சிக்கிக் கொண்டார். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. அங்கிருந்து விளம்பர படப்பிடிப்புக்காக அவர் லண்டன் செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனாவால் அவர் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது.

துடித்துக் கொண்டிருக்கிறேன்

துடித்துக் கொண்டிருக்கிறேன்

கடந்த 4 மாதங்களாக அபுதாபியில் இருந்த அவர், 'ஊருக்குத் திரும்புவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை' என்று கூறியிருந்தார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், அபுதாபியில், என் ஃபிரண்ட் வீட்டில் இருக்கிறேன். இங்கு இருப்பதில் மகிழ்ச்சிதான். ஆனாலும் அம்மாவையும் சகோதரரையும் பார்க்க முடியவில்லை என்கிற கவலை இருக்கிறது. ஊருக்குத் திரும்ப துடித்துக் கொண்டிருக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

விமான எமோஜி

விமான எமோஜி

இந்நிலையில், அபுதாபியில் இருந்து அவர் கிளம்பிவிட்டார். இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ள மெளனி ராய், ஒரு வீடியோவில் முகக் கவசம், பேஸ்ஷீல்ட் அணிந்தபடி இருக்கிறார். மற்றொரு வீடியோவில், விமானத்தில் அமர்ந்திருக்கிறார். கேப்ஷனாக டாட்டா என்று பதிவிட்டு, விமான எமோஜியை பதிவிட்டுள்ளார். அவர் அபுதாபியில் இருந்து இந்தியா திரும்பவில்லை என்றும் ஷூட்டிங்கிற்காக அப்படியே லண்டன் செல்வதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பான பயணம்

பாதுகாப்பான பயணம்

இந்த வீடியோவுக்கு பலர், தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஒருவர், மாஸ்க்கை, மூக்குக்கும் சேர்த்துதான் போடணும். வாய்க்கு மட்டும் போடக்கூடாது. இப்படியிருந்தா கொரோனா வேகமா வந்து தாக்கும்' என்று எச்சரிக்கை செய்துள்ளார். மற்றொருவர், 'அப்பாடா, கடைசியாக பாதுகாப்பான பயணம் கிடைத்துவிட்டது' என்று கூறியுள்ளார். மேலும் சிலர், சீக்கிரம் வாங்க என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X