அக்ஷய் குமார் படத்தில் நடித்தபோது ஹீரோயினுக்கு பாலியல் தொல்லையா?
மும்பை: அக்ஷய் குமாரின் கோல்டு படத்தில் நடித்தபோது மவுனி ராய்க்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ரீமா கக்டி அக்ஷய் குமாரை வைத்து எடுத்த கோல்டு படத்தில் நாகினி தொலைக்காட்சி தொடர் புகழ் மவுனி ராய் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோது மவுனி ராய்க்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பேச்சு கிளம்பியது.
இது குறித்து நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இயக்குனர்கள்
பாலியல் தொல்லை கொடுத்தவர்களுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டோம் என்று கூறி பாலிவுட்டின் பெண் இயக்குனர்கள் சிலர் அறிவித்துள்ளனர். அதில் ரீமா கக்டியும் ஒருவர். இதை பார்த்த ஒருவர் கோல்டு படத்தில் மவுனி ராய்க்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் இப்படி சொல்கிறாரா என்று கேட்டார்.
மவுனி ராய்
தன்னை பற்றி வந்த ட்வீட்டை பார்த்த மவுனி ராய் பதில் அளித்துள்ளார். கோல்டு பட செட்டில் ரீமா கக்டி தனக்கு எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் மவுனி ராய்.

ஈவ் டீசிங்
மும்பையில் நடந்த ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட மவுனி ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாம் குழந்தைகளாக இருந்தபோது ஈவ் டீசிங் கொடுமையை அனுபவித்திருப்போம். நான் டெல்லியில் படித்தேன். தெருவில் நடக்கவே பயப்படுவேன். ஈவ் டீசிங் கொடுமையை அனுபவித்திருக்கிறேன் என்றார்.

ஆதரவு
மீ டூ இயக்கத்தை வரவேற்கிறேன். தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்பொழுது பேசவில்லை என்றால் பிறகு எப்பொழுது பேசுவார்கள்?. பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஆனால் சம்பவம் நடந்த உடனே தெரிவித்தால் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்று மவுனி ராய் தெரிவித்தார்.

ஆதாரம்
தற்போது தெரிவிக்கப்பட்ட பல புகார்கள் தொடர்பான சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. அதற்கு ஆதாரம் இல்லாமல் உள்ளதால் நீதிமன்றம் செல்வது கடினம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, பாலியல் தொல்லைக்கு ஆளானால் அது குறித்து வெளியே சொல்ல வேண்டும். இது மிகவும் முக்கியம் என்று மவுனி கூறினார்.


Click it and Unblock the Notifications











