இப்படி ஒரு லுக், அப்படியொரு போஸ்.. இதுக்கு மேலே ஒல்லி ஆயிடாதீங்க.. நாகினி நடிகையின் கிர்ர் போட்டோஸ்
மும்பை: பிரபல நாகினி நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் பல்வேறு மொழிகளில் அதிகமான ரசிகர்களை பெற்றவர் நடிகை மெளனி ராய்.
இந்தியில் ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

பிரம்மாஸ்திரா
யஷ் நடித்து வெளியான, கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார். இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் மெளனி ராய்.

விளம்பர படப்பிடிப்பு
போட்டோஷூட் ஒன்றுக்காக, லாக்டவுனுக்கு முன் அபுதாபி சென்ற நடிகை மெளனி ராய், அங்கேயே சிக்கிக் கொண்டார். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. பின்னர் நான்கு மாதங்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் அங்கிருந்து விளம்பர படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார்.

புகைப்படங்கள்
தற்போது லண்டனில் இருக்கும் மெளனி ராய், அங்கிருந்து தினமும் ஒன்று அல்லது இரண்டு என விதவிதமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 13.7 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.

வைர மோதிரம்
பல டாப் ஹீரோயின்களுக்கு கூட இவ்வளவு பாலோயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் கையில் மின்னும் வைர மோதிரம் இருந்தது. அது திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி மெளனி ராய் ஏதும் கூறவில்லை.

ஹாலிவுட் நடிகை
இந்நிலையில் இப்போது அவர் சில ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. இதற்கு பிரபல ஹாலிவுட் நடிகை ஜசா ஜசா காபோர் (Zsa Zsa gabor) சொன்னதை கேப்ஷனாக வைத்துள்ளார். அதாவது, இந்த உலகத்தில் கொஞ்சம் பைத்தியமாக இருப்பது உங்களை விவேகமாக வைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
Recommended Video

ஒல்லியாகிடாதீங்க
இதற்கு ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் உங்க அழகு கூடிட்டே போகுது என்று சிலர் கூறியுள்ளனர். எப்போ இந்தியா திரும்புவீங்க? என்று சிலர் கேட்டுள்ளனர். சில நெட்டிசன்ஸ், இதுக்கு மேல ஒல்லியாகிடாதீங்க என்று கூறியுள்ளனர். பலர் அவர் அழகை அப்படி இப்படி வர்ணித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











