இப்படி ஒல்லியானா, கொரோனா தேடிவந்து அட்டாக் பண்ணுமே..' பிரபல நாகினி நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

By

மும்பை: பிரபல நாகினி நடிகை அமீரகத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நாகினி சீரியலில் நடித்தவர் மெளனி ராய். இந்த தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், இவரும் ஒருவர். அக்‌ஷய் குமாரின் கோல்ட் படத்தில் நடித்திருந்தார்.

ஷூட்டிங் தடை

ஷூட்டிங் தடை

'மொகுல்' படத்தில் ஆமிர்கான் ஹீரோவாக நடிக்கிறார். மெளனி ராய் ஹீரோயினாக நடிக்கிறார். கொரோனா லாக்டவுனால் இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்நிலையில் போட்டோ ஷூட் ஒன்றுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த நடிகை மெளனி ராய், லாக்டவுன் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டார். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட பலரில் இவரும் ஒருவர்.

ஷூட்டிங் தடை

ஷூட்டிங் தடை

'மொகுல்' படத்தில் ஆமிர்கான் ஹீரோவாக நடிக்கிறார். மெளனி ராய் ஹீரோயினாக நடிக்கிறார். கொரோனா லாக்டவுனால் இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்நிலையில் போட்டோ ஷூட் ஒன்றுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த நடிகை மெளனி ராய், லாக்டவுன் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டார். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட பலரில் இவரும் ஒருவர்.

தோழி வீட்டில்

தோழி வீட்டில்

கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்த அவர், 2 மாதமாக எமிரேட்ஸில் சிக்கித் தவிப்பதாக கூறி இருந்தார். 'மார்ச் மாதம் நான்கு நாள் ஒர்க் என்பதால், 4 நாட்களுக்குத் தேவையான உடைகளை மட்டுமே எடுத்து வந்தேன். அடுத்த புராஜக்ட் ஏப்ரல் 15 ஆம் தேதிதான் என்பதால் இங்குள்ள என் தோழி வீட்டில் தங்க திட்டமிட்டிருந்தேன்.

லாக்டவுன்

லாக்டவுன்

ஆனால், உலகமே இப்படி லாக்டவுன் ஆகும் என்று நினைக்கவில்லை. இந்தியா திரும்பும் நாளை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். அவர் இன்னும் இந்தியா திரும்பவில்லை. ஆனால், ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருந்து எடுத்த புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார், நடிகை மெளனி ராய்.

அழகா இருக்கீங்க?

அழகா இருக்கீங்க?

இப்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளனர். கமென்ட்களையும் தெரிவித்துள்ளனர். பல நெட்டிசன்கள் அவர் அழகை வர்ணித்துள்ளனர். எப்படி நீங்க மட்டும் இவ்வளவு அழகா இருக்கீங்க? என்றும் சிலர் ஆச்சரியப்பட, ஒரே ஒரு பதில் போடுங்க என்று சிலர் கெஞ்சியுள்ளனர்.

அட்டாக் பண்ணும்

அட்டாக் பண்ணும்

ரொம்ப ஒல்லியாகிட்டீங்க.. இந்த நேரத்துல இம்யூனிட்டி குறைஞ்சா கொரோனா ஈசியா அட்டாக் பண்ணும் என்று சிலர் அட்வைஸ் செய்துள்ளனர். சீக்கிரமா உடம்பை ஏத்துங்க என்று ஒருவர் கூறியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் உங்க கிளாமர் கூடிட்டே போகுதே என்ன காரணம்? என்று ஒரு நெட்டிசன் ஆச்சரியமாகக் கேட்டிருக்கிறார்.

எப்ப பார்க்கலாம்?

எப்ப பார்க்கலாம்?

படிகளில் நாகினி.. பார்த்து நடக்கணும் போலயே என்று ஒருவர் கிண்டலாகக் கூற, சிலர் நாகினி தொடர்ல திரும்பவும் எப்ப உங்களை பார்க்கலாம்? என்று கேட்டுள்ளனர். படிகள்ல இருக்கிற கார்பெட்டுக்கு மேட்சா டிரெஸ்சா? இல்ல டிரெஸ்கு மேட்சான கார்பெட்டா? என்று கலாய்த்துள்ளார் இன்னொருவர். மெளனி ராயின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X