நாகினி படுத்திருக்கு பாத்து.. வரிக்குதிரை டிரெஸ்சில் கடல்குதிரை.. வைரலாகும் பிரபல நடிகை போட்டோஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளிநாட்டில் இருந்து வெளியிட்டுள்ள ஜில் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பிரபல நடிகைகளின் ஹாட் ஸ்பாட்டாக மாறியிருக்கிறது அழகழகான குட்டித்தீவுகளை கொண்ட மாலத்தீவு.
நடிகைகள், டாப்ஸி, மந்திரா பேடி, மெளனி ராய் உள்பட பலர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

போட்டோகிராபர்
தினமும் புகைப்படங்களாக, அங்கிருந்து வெளியிட்டு வருகின்றனர். இவர்களை படம் பிடிப்பதற்காகவே, ரிசார்ட்டில் போட்டோகிராபர் இருக்கிறாரா அல்லது இவர்களுடன் சென்றவர்களே அந்த புகைப்படங்களை எடுக்கிறார்களா? என்பது தெரியவில்லை. ஆனால், அனைத்து புகைப்படங்களும் தேர்ந்த புகைப்பட கலைஞர்கள் எடுத்தது போலவே இருக்கிறது.

ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்
நடிகை மெளனி ராயும் இதை கடமையாகவே செய்து வருகிறார். கொரோனா காலத்திலும் ஷூட்டிங் பிசியில் இருந்த மெளினி ராய், இப்போது ஜாலியாக பொழுதை கழித்துவருகிறார். கூடவே அவர் சகோதரியும் இருக்கிறார். அவர் வெளியிடும் பிகினி உள்ளிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.

செல்ஃபி வீடியோ
பிகினி உடையில், ஒரு கையில் தேங்காயை பிடித்தபடி அவர் வெளியிட்டிருந்த செல்ஃபி வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது. நடிகை மெளனி ராய், 'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் எக்கச்சக்க ரசிகர்களை பெற்றவர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

ஒரு பாடலுக்கு
இந்தி நடிகையான இவர், ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த, லண்டன் கான்ஃபிடன்ஷியல் என்ற படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

பழைய கதை
அவர் மாலத்தீவு காட்டுக்குள், மரங்களின் மீது மல்லாக்கப் படுத்தபடியும் அமர்ந்தபடியும் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகின. இப்போது அவர் வரிக்குதிரை உடையில் எடுத்துள்ள புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. இதற்கு லட்சக்கணக்கான நெட்டிசன்ஸ் லைக்ஸ்களை அள்ளித் தெளித்துள்ளனர்.

வரிக்குதிரை டிரெஸ்
ஒருவர், நாகினி படுத்திருக்கு, தூங்குதா இல்லையான்னு தெரியலை, பாத்துப்பா என்று கிண்டலாகக் கூறியுள்ளார். வரிக்குதிரை டிரெஸ்ல, கடல் குதிரை மாதிரி இருக்கீங்க என்று மற்றொருவர் கூறியுள்ளார். பல நெட்டிசன்ஸ் அவர் அழகை வர்ணித்துள்ளனர். இதுதான் சன் பாத்தா?என்று சிலர் கேட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











