சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்!

By

சென்னை: பிரபல நடிகை தனது துபாய் காதலரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் எக்கச்சக்க ரசிகர்களை பெற்றவர் மெளனி ராய்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

இந்தியில் அவர், ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா சூப்பர் ஹீரோ கதையை கொண்டது.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார் மெளனி ராய். படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். கடைசியாக அவர் நடித்த, லண்டன் கான்ஃபிடன்ஷியல் என்ற படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது. லாக்டவுனுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர் அங்கு சிக்கிக் கொண்டது பழைய கதை.

மறுத்து வந்தார்

மறுத்து வந்தார்

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவருக்கு, இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அவர் துபாயை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், அதை மறுத்து வந்தார் மெளனி ராய். தான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறி வந்தார்.

கையில் மோதிரம்

கையில் மோதிரம்

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன், கையில் மோதிரம் அணிந்து இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதுபற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்நிலையில், அவர் காதலித்து வரும் நபர், துபாயை சேர்ந்த சுராஜ் நம்பியார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டதை அடுத்து, விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சுராஜ் புகைப்படம்

சுராஜ் புகைப்படம்

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சுராஜ் நம்பியாரின் தாய் மற்றும் குடும்பத்தினருடன் அவர் இருக்கும் வீடியோவை நடிகை மெளனி ராய் வெளியிட்டிருந்தார். இதற்கிடையே, மெளனி ராயின் தோழியான ரூபாலி, சுராஜூடன் மெளனி இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

ராய் தெரிவிப்பார்

ராய் தெரிவிப்பார்

பின்னர் அதை டெலிட் செய்துவிட்டார். வழக்கம் போல இந்த செய்திகளுக்கும் மெளனி ராய் எதுவும் பதிலளிக்கவில்லை. எப்போது, எங்கு திருமணம் நடக்க இருக்கிறது என்பது பற்றிய தகவல்களை நடிகை மெளனி ராய் விரைவில் தெரிவிப்பார்
என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X