இது வேற லெவலா இருக்கே.. நீச்சல் குளத்தில் மல்லாக்கப்படுத்தபடி பிரபல நடிகையின் பிகினி போஸ்!

By

மும்பை: பிரபல நாகினி நடிகை மெளனி ராய் வெளியிட்டு ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்தியில் வெளியான 'நாகினி' தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மெளனி ராய்.

இந்த தொடர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மெளனி ராய், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்தியில் அவர், ரன், மேட் இன் சைனா, கோல்ட் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கே.ஜி.எஃப் படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

வில்லியாக நடிக்கிறார்

வில்லியாக நடிக்கிறார்

இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா சூப்பர் ஹீரோ கதையை கொண்டது. இதில் வில்லியாக நடித்து வருகிறார் மெளனி ராய். படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். கடைசியாக அவர் நடித்த, லண்டன் கான்ஃபிடன்ஷியல் என்ற படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

மறுத்து வந்தார்

மறுத்து வந்தார்

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவருக்கு, இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்கள் இருக்கிறார்கள். அவர் துபாயை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியானது. ஆனால், அதை மறுத்து வந்தார். தான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறி வந்தார்.

மோதிரம்

மோதிரம்

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன், கையில் மோதிரம் அணிந்து இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதுபற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அவர் காதலித்து வரும் நபர், துபாயை சேர்ந்த சுராஜ் நம்பியார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டதை அடுத்து, விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.

மல்லாக்கப் படுத்தபடி

மல்லாக்கப் படுத்தபடி

இந்நிலையில், நடிகை மெளனி ராய், பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் மல்லாக்கப்படுத்தபடி அவர் வெளியிட்டுள்ள டாப் ஆங்கிள் பிகினி புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. நெட்டிசன்ஸ், கன்னாபின்னாவென கமென்ட்களை குவித்துள்ளனர்.

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

பலர் அவர் அழகை அப்படி இப்படி புகழ்ந்து தள்ளியுள்ளனர். சான்ஸே இல்லை என்றும் இது வேற லெவல் ஹாட் என்றும் பலர் தெரிவித்துள்ளனர். ஒரு தமிழ் ரசிகர், கடைசியா பாம்பு சட்டையை கழற்றிடுச்சு டோய் என்று தெரிவித்துள்ளார். மெளனி, நாளுக்கு நாள் அழகு கூடிட்டே போகுதே என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X