இருந்தாலும் கொஞ்சம் ஓவர்தான்! கிரிக்கெட் விளையாடிய அஜித்குமாரை பங்கமாக கலாய்த்த ப்ளு சட்டை மாறன்!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் இருக்கக் கூடிய சினிமா விமர்சகர்களில் மிகவும் முக்கியமான மற்றும் அதிகப்படியான மக்கள் பார்க்கக்கூடிய விமர்சகார இருப்பவர் ப்ளூ சட்டை மாறன். இவர் ஒரு படத்திற்கு விமர்சனம் செய்கின்றார் என்றால், அந்த படத்திற்கு அவர் என்ன மாதிரியான விமசனங்களைத் தரப்போகின்றார் என்பதைக் காண பல லட்சக்கணக்கான இணைய வாசிகள் உள்ளனர்.

மற்ற விமர்சகர்கள் பாராட்டும் போதும், கூட ப்ளூ சட்டை மாறன் படத்தில் இயக்குநர் கோட்டைவிட்ட இடங்களை சுட்டிக்காட்டி இருப்பார். இவரைப் பொறுத்தவரையில் வசூலைக் குவிப்பது மட்டும் படம் இல்லை, நல்ல கண்டெண்ட் இருக்க வேண்டும் என நினைத்து விமர்சனம் செய்பவர். அதேநேரத்தில் விமர்சன ரீதியாக பலர் பாராட்டிய படங்களைக் கூட ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பதையும் மறுக்க முடியாது.

Blue Sattai Maaran Ajithkumar Vidaamuyarchi Good Bad Ugly

ப்ளூ சட்டை மாறன்: தமிழ் படங்களுக்கு மட்டும் இல்லாமல் தமிழ் நாட்டில் கவனம் ஈர்க்கும் மாற்று மொழி படங்களுக்கும் விமர்சனம் செய்து கொண்டு இருந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது அஜித் குமாரின் ரீசண்ட் போட்டுகளுக்கு ரிவ்யூ கொடுத்துள்ளார். அதாவது அஜித் தனது மகன் ஆத்விக் உடன் கிரிக்கெட் விளையாடுவதைப் போன்ற புகைப்படம் இன்று அதாவது ஜூன் மாதம் 19ஆம் தேதி இணையத்தி வேகமாக பரவியது. இந்த புகைப்படங்கள் குறித்து ஒரு செய்தி தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், " இதை வழக்கம்போல ஃபோட்டோ எடுத்து பப்ளிசிட்டி செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டார். அவர்களும் வழக்கம்போல பப்ளிசிட்டி செய்து விட்டார்கள். இதுதான் தலயின் எளிமை" என விமர்சித்துள்ளார்.

அஜித் குமார்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் நடிக்கும் நேரம் போக தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதில் அதிக ஆர்வம் காட்டக்கூடிய நபராக இருந்து வருகின்றார். தற்போது அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி இந்த ஆண்டு வெளியாகும் எனவும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு வெளியாகும் கூறப்படுகிறது.

Blue Sattai Maaran Ajithkumar Vidaamuyarchi Good Bad Ugly

மகனுடன் கிரிக்கெட்: இந்நிலையில் அஜித் குமார் தனது மகன் ஆத்விக் உடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த அஜித் ரசிகர்கள் தங்களது அன்பினை வெளிப்படுத்தும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். வெளியாகியுள்ள புகைப்படங்களில் அஜித் குமார் பேட்டிங் செய்வதை போலவும் அவரது மகன் ஆத்விக் பந்து வீசுவதை போலவும் உள்ளது. இந்த புகைப்படத்திற்கு எக்கச்சக்க லைக்குகளை அவரது ரசிகர்கள் தட்டி விட்டு வருகின்றனர்.

அஜித் அண்மையில் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்தார். அடுத்து அஜர்பைஜானில் நடைபெறவுள்ள விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்குச் செல்லவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த தகவலை அண்மையில் நடிகர் அர்ஜுனும் உறுதி செய்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X