விஜய் ஆண்டனி, பிரபாஸ் ரசிகர்களை சீண்டும் ப்ளூ சட்டை மாறன் - எக்ஸ் பக்கத்தில் நடக்கும் கூத்து!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் கவனிக்கப்படும் திரைப்பட விமர்சகர்களில் அதிகம் கவனம் பெறுபவர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இவர் திரைப்படங்களை விமர்சிப்பது பல திரைப்பிரபலங்களுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் பலர் இவருடன் சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பதிலுக்கு ப்ளூ சட்டை மாறனும் எதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பார். இது இணையவாசிகளுக்கு ஒருவித பொழுது போக்காகவே அமைந்துவிட்டது.

Blue Sattai Maran Prabhas Vijay Antony

அண்மையில் கூட ப்ளூ சட்டை மாறனுக்கும் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனிக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியே வந்த ரோமியோ படத்தினை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து ரோமியோ படம் மிகவும் நல்ல படம், நல்ல கருத்தை இந்த படம் தாங்கி வந்துள்ளது. இந்தப் படத்தை தவறவிடாதீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

Blue Sattai Maran Prabhas Vijay Antony

இது மட்டும் இல்லாமல் ஸ்டார் படத்தின் ரிவ்யூவில் கூட ப்ளூ சட்டை மாறன், விஜய் ஆண்டனியை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்திருந்தார். இதற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு, விஜய் ஆண்டனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, " அவர் அந்த மாதிரி பேசினால் தானே நீங்களும் பார்ப்பீர்கள். அவருடைய பிழைப்புக்காக எதோ செய்கின்றார்" என பதில் அளித்திருந்தார். இந்த பிரச்னை முடிந்தது என நினைத்துக் கொண்டு இருக்கும்போது தற்போது புதுப் பிரச்னையை ப்ளூ சட்டை மாறன் தொடங்கியுள்ளார்.

Blue Sattai Maran Prabhas Vijay Antony

ப்ளூ சட்டை மாறன் பொதுவாகவே சமூகத்தில் நடைபெறும் சமகால நிகழ்வுகளை மைய்யப்படுத்தி தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் சில தினங்களுக்கு முன்னர் வெளியான கல்கி 2898 ஏ.டி படம் குறித்த விமர்சனத்தின்போது நடப்பு டி20 உலகக்கோப்பையில் விராட்கோலி இந்திய அணிக்காக என்ன செய்தாரோ அதையேதான் கல்கி 2898 ஏ.டி படத்தில் பிரபாஸ் செய்துள்ளார் என கடுமையாக விமர்சித்தார்.

Blue Sattai Maran Prabhas Vijay Antony

கல்கி 2898 ஏ.டி: இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்தியாவில் இதுவரை செலவிடப்படாத அளவிற்கு பொருட் செலவு செய்து ஒரு பான் இந்தியா படமாக இல்லாமல் பான் வோர்ல்ட் படமாக கல்கி 2898 ஏ.டி படத்தினை தயாரித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அன்னா பென், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. படம் மகாபாரதக் கதையையும் அதிநவீன அறிவியல் வளர்ச்சியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வெளியானது.

Blue Sattai Maran Prabhas Vijay Antony

விஜய் ஆண்டனி: இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் நடிக்கவே தெரியாத நடிகர் யார் எனக் கேட்டு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ள மகேஷ் பாபு மற்றும் பிரபாஸ் ஆகியோரையும் இந்தி திரையுலகில் கதாநாயகனாக வலம் வரும் அஜய் தேவ்கன் பெயரும் தமிழ் சினிமாவில் இருந்து விஜய் ஆண்டனியின் பெயரையும் சேர்த்து தனது ஃபாலோவர்ஸிடம் வாக்கெடுப்பு கேட்டுள்ளார். இதன் மூலம் விஜய் ஆண்டனியுடனான பிரச்னையை மீண்டும் கிளப்பியுள்ளர் ப்ளூ சட்டை மாறன். இதுமட்டும் இல்லாமல் பிரபாஸின் ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Blue Sattai Maran Prabhas Vijay Antony

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X