ப்ளூ சட்டை மாறனால் பாராட்டபட்ட சரத்குமார் படம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் இருந்த சினிமா விமர்சகர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தது. அனைத்து பத்திரிகைகளும் புதுபடத்திற்கு விமர்சனம் எழுதும், சன் டிவியில் மட்டும் டாப் 10 சினிமா என்ற வரிசையில் புதுப்படங்கள் மக்களின் வரவேற்பிற்கு ஏற்ற வகையில் வரிசைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்றை இணைய உலகத்தில் படம் ரிலீசான தினத்திலேயே படத்தின் விமர்சனங்கள் இணையத்தில் உலா வருகின்றது. இப்படியான நிலையில் அதிக சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் சினிமா விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன்.
இவரது விமர்சனங்கள் படக்குழுவினருக்கு சில நேரங்களில் கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவரது திரைவிமர்சன தொனி என்பது பலதரப்பட்ட ரசிகர்களால் விரும்பப்படுவதால் தமிழ் சினிமா விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறன் கவனம் பெறும் இடத்தில் இருக்கின்றார். படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் கூட, ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கு என்னமாதிரியான விமர்சனம் கொடுத்துள்ளார் என அவர்களது யூட்யூப் சேனலை தேடிப்பார்ப்பவர்கள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றனர்.

ப்ளு சட்டை மாறனைப் பொறுத்தவரையில் உச்ச நடிகரோ வளர்ந்து வரும் நடிகரோ என்றெல்லாம் இல்லாமல் படம் அவரைக் கவர்ந்திருந்தால் பாராட்டித் தள்ளிவிடுவார். சமீபத்தில் மலையாள படங்களுக்கும் ரிவ்யூவ் கொடுக்க ஆரம்பித்துள்ள ப்ளூ சட்டை மாறன் கேரளாவில் கவனம் பெற்று வருகின்றார்.

இப்படியான நிலையில் ப்ளூசட்டை மாறன் சரத்குமார் படம் ஒன்றிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார். அதில், சரத்குமார் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான சூர்யவம்சம் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து அதிகப்படியான மக்களால் திரையரங்கிற்குச் சென்று பார்க்கப்பட்ட படம் சூர்யவம்சம். அதன் இயக்குநர் விக்ரமன் என பதிவிட்டுள்ளார்.

ஏன் திடீரென இந்த போஸ்ட்: இந்த பதிவை ப்ளு சட்டை மாறன் இன்றைக்கு பதிவிட முக்கிய காரணம் உள்ளது. சூர்ய வம்சம் படம் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகின்றது. இதனால் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து ப்ளூ சட்டை மாறன் இவ்வாறு பதிவிட்டுள்ளார். சூர்யவம்சம் படம் இன்றைக்கும் எவர்கிரீன் ஃபேமலி எண்டர்டைனரில் முக்கியமான இடத்தில் உள்ளது.

சூர்யவம்சம்: ஆர்.பி.சௌத்ரியின் சூப்ப்ர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யவம்சம் படத்தினை இயக்குநர் விக்ரமன் இயக்கினார். இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக அப்பா கதாபாத்திரத்திற்கு ராதிகாவும், மகன் கதாபாத்திரத்திற்கு தேவையானியும் நடித்திருபார்கள். மணிவண்ணன், சுந்தர்ராஜன் ஆகியோரது கதாப்பாத்திரங்களின் நகைச்சுவை படம் முழுவதும் பிரமாதப்படுத்தியிருக்கும்.

ரீமேக்: 2000-களில் அதிகம் விற்பனையான கதை வசன ஆடியோ கேசட்டுகளில் சூரிய வம்சம் படத்தின் கதை வசன ஆடியோ கேசட் டாப் லிஸ்ட்டில் இருந்தது என்றே குறிப்பிடலாம். படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் பாராட்டப்பட்டார். இப்படம் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இணையம், மீம்ஸ் என வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் கூட சூர்யவம்சம் படத்தின் மீம்ஸ்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.


Click it and Unblock the Notifications











