TVK Vijay: விஜய் மேடையில் எமோஷன் ஆன டீச்சர்! பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்! கொஞ்சம் ஓவரா போராறோ?

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே தனது ரசிகர் நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சட்டமன்றங்கள் வாரியாக நேரில் அழைத்து கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது கட்சியின் மூலம் வழங்குகின்றார்.

முதற்கட்டமாக இன்று அதாவது ஜூன் 28ஆம் தேதியன்று சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை. நாமக்கல்,நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை,தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருகின்றார்.

Blue Sattai Maran Vijay TVK

அடுத்து வரும் ஜூலை 3ஆம் தேதி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

போதைப் பொருளுக்கு நோ: விஜய் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, " மாணவர்களாகிய நீங்கள் எப்போதும் போதைப் பொருளுக்கு 'நோ' சொல்ல வேண்டும் என பேசினார். போதைப்பொருட்களில் இருந்து அரசாங்கம் நம்மைக் காக்கவேண்டும் என்பதை விட நமது உடல் நலத்தின் மீது நாம்தான் அதிக அக்கறையுடன் செயல்படவேண்டும். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். படித்தவர்கள் தலைவர்களாக வரவேண்டும். போதையினால் உங்களின் அடையாளத்தை இழந்து விடாதீர்கள். இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் அதிகமாக இருப்பதைப்பார்க்கும்போது எனக்குமே அச்சமாகத்தான் இருக்கின்றது. " Say No To Temporary Pluses, Say No To Drugs"என விஜய் இரண்டு முறை கூற மாணவர்கள் திரும்பச் சொன்னார்கள்."

விஜய்: இந்நிலையில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை வழங்கி வந்து கொண்டு இருந்தபோது ஆசிரியை ஒருவர் தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்ததைப் படித்தார். அப்போது, விஜய்யின் தலைவா படத்தில் வரக்கூடிய வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை விஜய்யின் அரசியல் வருகைக்கு ஏற்றவாறு வரிகளை மாற்றிப் பாடினார். இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “ ப்ளீஸ் கூல் டவுன் மேடம். எமோஷன் ஓவரா கீது” என கேப்ஷன் இட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கலாய்க்கப்பட்ட அஜித்: இதுமட்டும் இல்லாமல், ஏற்கனவே ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், நடிகர் அஜித் கல்லூரி மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கல்லூரி மாணவர்களுடன் அஜித் என கேப்ஷன் இட்டிருந்தார். இந்த பதிவுக்கு முன்னர், “ தல.. மாணவர்கள் மத்தியில் விஜய் இன்னைக்கி பயங்கரமா ஸ்கோர் பண்ணிட்டு இருக்காரு. ஏதாச்சும் ஃபோட்டோ வை எறக்கி விடுங்க. பழசா இருந்தாலும் பரவால்ல” என பதிவிட்டுருந்தார்.

இணையவாசிகள் கருத்து: விஜய் மாணவர்கள் மத்தியில் பேசிய பேச்சுக்கு இணையவாசிகள் சிலர், சினிமாவில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்துவிட்டு, நல்லா சம்பாதித்துவிட்டு, இளைய தலைமுறையைக் கெடுத்துவிடவேண்டியது. அரசியல் என வந்துவிட்டால் உபதேசம் செய்ய வேண்டியது என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X