ரஜினி, கமல் வயதை கலாய்த்து மீம்! ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தமிழ் சினிமாவில் 80களில் இருந்து முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் நடிகர்கள் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தான். இதற்கிடையில் எத்தனையோ நடிகர்கள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பின்னரும் இவர்கள் இருவரது மார்க்கெட் மட்டும் இன்றுவரை குறையவேயில்லை. இவர்கள் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்றால் அது, கமல் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் ரஜினி நடிப்பில் வேட்டையன் ஆகிய படங்கள் தான். இந்நிலையில் இவர்கள் இருவர் குறித்து பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரும் 12ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு உள்ளது. இதில் கமல்ஹாசன் பேசுகையில், "எனது மகள் ஸ்ருதி மனது வைத்திருந்தால் நான் எப்போதோ தாத்தா ஆகியிருப்பேன் எனக் கூறியிருந்தார். அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பிலும், நான் தாத்தா தான் என்கின்ற தொனியில் பேசியிருந்தார்.
சூப்பர் ஸ்டார்: அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி முடிந்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது.

படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் ரஜினிக்கு சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனால் ரஜினி டப்பிங் செய்ய வர மறுப்பதாகவும் பேச்சுகள் அடிபட்டது. இந்த படத்தினைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான லுக் டெஸ்ட் நடந்து முடிந்த பின்னர் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் கூலி படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துவிட்டது.

லைகா: இது மட்டும் இல்லாமல் கடந்த வாரத்தில் கமல் ஹாசனின் மகளு நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது தொடர்பாக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படமும் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படமும் லைகா புரெடக்ஷனால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மீம்: இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், " 'இந்தியன் 2 வில் வயதான தாத்தாவாக கமலும், கூலியில் வயதான தாதாவாக ரஜினியும் கலக்குவார்கள்' எனவும் 'அவங்க ரெண்டு பேருமே உண்மையாவே தாத்தாதானடா..' எனவும் மீம் வடிவில் பகிர்ந்து கலாய்த்துள்ளார். இந்த பதிவுக்கு அவர்கள் இருவரது ரசிகர்களும் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

பாராட்டு: தமிழ் சினிமாவில் இருவரும் தங்களது உண்மையான தோற்றத்தை வெளிக்காட்டத் தயங்காத நடிகர்களாக தொடக்கத்தில் இருந்தே இருந்து வந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, சினிமா வேறு நிஜம் வேறு என மக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காகத்தான் என சினிமா வட்டாரத்தில் ரஜினி மற்றும் கமலை இன்றைக்கும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











