என்னங்க இது! திமுக வாழ்த்தல ஓ.கே! ரஜினி ஏன் வாழ்த்தல! பட்டியலிட்ட விஜய்.. சுட்டிக்காட்டிய ப்ளூ சட்டை

சென்னை: தமிழ் சினிமாவில் உச்சநடிகராக இருப்பவர்களில் விஜய்க்கு முக்கிய இடம் உள்ளது. தொடர்ந்து தனது படங்கள் மூலம் மாபெரும் வசூல் மன்னனாக உள்ள விஜய், தான் தற்போது ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக, தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கியபோது அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதற்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், தவெக நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள், ஊடகத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் அரசியல் தலைவர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bule Sattai Maran 50

நன்றி தெரிவித்த விஜய்: அதில், “ எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் என்.ரங்கசாமி. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கமல்ஹாசன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக்.

சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான கு. செல்வப்பெருந்தகை. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், கே.அண்ணாமலை, முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர். எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர். சி.விஜயபாஸ்கர்,சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர். விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர். தாரகை கத்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்தாத திமுக: விஜய் பிறந்த நாளுக்கு திமுக தரப்பில் இருந்து வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விஜய் வெளியிட்ட கண்டன அறிக்கைதான் என கூறப்படுகின்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. சினிமாத்துறையினரை கலைத்துறை நண்பர்கள் என விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினியின் எக்ஸ் பக்கத்திலும் விஜய்க்கு வாழ்த்து பதிவு எதுவும் இடம் பெறவில்லை. அதேபோல் ரஜினி தனிப்பட்ட முறையில் வாழ்த்தினாரா எனத் தெரியவில்லை.

Bule Sattai Maran 50

ப்ளூசட்டை மாறன் கேள்வி: இந்நிலையில், விஜய்யின் நன்றிப் பதிவில், திமுகவினர் பெயரும் ரஜினியின் பெயரும் இடம் பெறாததால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “ திமுக சார்பில் யாரும் வாழ்த்தவில்லை. அதற்கு காரணம் புரிகிறது. ரஜினி ஏன் விஜய்யை வாழ்த்தவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X