நடு இரவு... 12 மணி நேரத்துக்குள் ஒரு முழுப் படம் ஷூட்டிங்!
சில ஆண்டுகளுக்கு முன்பு 24 மணி நேரத்தில் பல யூனிட் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி 'சுயம்வரம்' என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம்.
அடுத்ததாக 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது ஒரு குழு.

நடு இரவு
ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக விஎஸ்மோகன்குமார் தயாரிக்கும் படத்திற்கு 'நடு இரவு' என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே.

புதுகை மாரிசா
இப்படத்துக்கு உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் ரமேஷ் கிருஷ்ணா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா.

12 மணி நேரத்தில்
படம் பற்றி இயக்குனர் புதுகை மாரிசாவிடம் கேட்டோம். "இம்மாதம் 19 ம் தேதி படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம்.மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம்.

பேய் என்பதால் தெரிந்த முகம் தேவையில்லை
பேய் சம்மந்தப் பட்ட கதை என்பதால் முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்த பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து.
முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார்," என்கிறார்.

துவக்க விழா
இந்த படத்தின் துவக்க விழா தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர், ஜி.சேகரன் இயக்குனர் சக்திசிதம்பரம் ஆகியோர் தலைமையில் இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.


Click it and Unblock the Notifications











