கூலி படத்தில் ரஜினியின் பெயர் என்ன தெரியுமா? அட்டகாசமாக வெளியான அப்டேட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த, அட்டகாசமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக அந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்களை படக்குழு அறிவித்து வருகின்றது
ரஜினியின் 170வது படமாக உருவாகி உள்ள வேட்டையன் படத்தில், ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான டப்பிங் பணியை ரஜினிகாந்த் இரண்டு தினத்திற்கு முன் தொடங்கினார்.

வேட்டையன்: அதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படமும் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால், கோலிவுட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சூர்யா, அக்டோபர் பத்தாம் தேதி வேட்டையன் படம் மட்டுமே வெளியாகும். கங்குவா வேறு தேதியில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினார்.
கூலி: வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த போஸ்டர் படக்குழு வெளியிட்டு வருகிறது.
அடுத்தடுத்த அப்டேட்: அந்த வகையில், பிரபல தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா. சைமன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் சுமார் 38 ஆண்டுகள் கழித்து, மிஸ்டர் பாரத் படத்திற்கு பிறகு சத்யராஜ் கூலி படத்தில் நடிக்க உள்ளார். மொட்டை தலை, தாடி, கண்ணாடியுடன் கருப்பு வெள்ளையில் சத்யராஜ் இருக்கும் போட்டோவை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் சத்யராஜ் 'ராஜசேகர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதே போல கன்னட நடிகர் உபேந்திரா கூலி படத்தில் காலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக் உள்ளார். சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கதாபாத்திரத்தின் பெயர்: இந்நிலையில், இன்று கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி கையில் 1421 கூலி பேஜுடன் இருக்க, "தேவா" என்கின்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். ரஜினிகாந்த் நடித்த தளபதி திரைப்படத்தில் மம்மூட்டியின் பெயர் தேவா, அந்த படம் ரஜினியின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படமாகும்.


Click it and Unblock the Notifications











