அன்புள்ள அப்பாக்களும்.. பாசக்கார மகள்களும்.. எப்பவுமே ஜெயம்தான்!

Recommended Video

வெற்றிகரமாக ஓடும் அப்பா மகள் படங்கள்- வீடியோ

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதே வரிசையில் நிறைய படங்கள் வருவது தொன்று தொட்டு உள்ள வழக்கம். இதில் எல்லா படங்களும் வெற்றி பெறுமா என்றால் கேள்விக்குறிதான்.

ஆனால் சமீப காலமாக அப்பா - மகள் பாசத்தை அடிப்படையாக வைத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.

பொங்கலுக்கு வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தில், மகளை பிரிந்த அப்பா, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமலே மகளுக்கு வரும் ஆபத்துகளை தடுப்பது தான் கதை.

அஜீத் - அனிகா

அஜீத் - அனிகா

என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாகவும், மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நயன்தாரா மகளாகவும் நடுத்திருந்த அனிகா, இதில் இருவருக்கும் மகளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

சத்யராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ்

சத்யராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ்

கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கனா. மகளிர் கிரிக்கெட் அரசியம், விவசாயம் போன்ற சீரியசான விஷயங்களை பேசினாலும், படத்தில் தந்தை மகளாக நடித்திருந்த சத்யராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு தத்ரூபமாக அமைந்திருந்தது.

மம்முட்டி - சாதனா

மம்முட்டி - சாதனா


இவை அனைத்தையும் தாண்டி, முழுக்க முழுக்க தந்தை மகள் பாசத்தை மட்டுமே வைத்து உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘பேரன்பு'. மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை தாயே விட்டுச் சென்ற நிலையில், தனி ஆளாக குழந்தையை வளர்க்கும் தந்தையாக மம்முட்டி நடித்திருந்தார். நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்றே கூறலாம்.

சாதனா

சாதனா


மம்முட்டியின் பெண்ணாக சாதனா. ஏற்கனவே தங்க மீன்கள் படம் மூலம் தந்தை - மகள் பாசத்தை பேசிய இயக்குனர் ராம், இப்படத்தில் வேறொரு தளத்தில் இன்னும் ஆழமாக பதிவு செய்துள்ளார். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, உலக திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம், பல விருதுகளை வென்றது.

கதைக்கரு ஒன்றாக இருந்தாலும், திரைக்கதை ரசிக்கும்படி அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் எத்தனை படங்கள் வந்தாலும் வெற்றி பெரும் என்பதற்கு இதுவே சான்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X