2019ல் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படங்கள்.. உங்கள் பார்வையில் எது பெஸ்ட்!

சென்னை: 2019 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான படங்களில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படங்கள் எவை என்பது குறித்து ஓர் பார்வை.

2019ஆம் ஆண்டில் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியான. ஆனால் அவற்றில் வெகு சில படங்கள் மட்டுமே பெரும் வெற்றி பெற்றன.

சில படங்கள் விமர்சன ரீதியாக நல்லவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. அதேபோல் சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்ற போதும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்காமல் ஏமாற்றத்தை அளித்தன.

அசுரன்

அசுரன்

அந்த வகையில் 2019ஆம் ஆண்டு வெளியான அசுரன் படம், பெரும் வெற்றி பெற்றது. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அசுரன் படத்தின் கதைக்களமும் நடிகர் தனுஷின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

கைதி

கைதி

அதனை தொடர்ந்து கைதி படம். தீபாவளி ரிலீஸாக விஜயின் பிகில் படத்துக்கு போட்டியாக ரிலீஸானது இப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படமாக்கப்பட்டது. அதோடு ஹீரோயின் இல்லாமல் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தடம்

தடம்

அடுத்து தடம். நடிகர் அருண் விஜய்க்கு ஒரு பிரேக்கப் கொடுத்தப்படம். மகிழ் திருமேனி இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் அருண் விஜய். கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் உருவாக்கப்பட்ட இப்படம் மக்களிடை பெரும் வரவேற்பை பெற்றது.

ஒத்த செருப்பு சைஸ் 7

ஒத்த செருப்பு சைஸ் 7

2019 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படமாக பேசப்பட்டது ஒத்த செருப்பு சைஸ் 7. நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்தப்படம். பார்த்திபன் ஒற்றை ஆளாக அசத்திய இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

அடுத்த சூப்பர் டீலக்ஸ்.. விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி, திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

பேரன்பு

பேரன்பு

2019ஆம் ஆண்டில் மம்முட்டி, நடிப்பில் வெளியான படம் பேரன்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மமுட்டி தமிழில் நடித்திருந்தார். இயக்குநர் ராம் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பக்ரீத்

பக்ரீத்

இதேபோல் 2019ஆம் ஆண்டு வெளியான பக்ரீத் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பெற்றது. விக்ராந்த் நடித்திருந்த இப்படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு. ஒட்டகத்தை வைத்து இப்படியொரு படத்தை கொடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்த படம் பக்ரீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X