ரஜினி, அஜீத், விஜய் தவறவிட்ட பட வாய்ப்புகள்
சென்னை: ரஜினிகாந்த், அஜீத், விஜய் என முன்னணி ஹீரோக்கள் பல பட வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர்.
நடிகர்களுக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்தாலும் கால்ஷீட் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் வாய்ப்பை ஏற்க முடியாமல் போகலாம்.
அப்படி ஒரு சில காரணங்களால் படங்களை தவற விட்ட நட்சத்திரங்களை பார்ப்போம்.

கஜினி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படத்திற்கு முதலில் மிரட்டல் என பெயர் வைத்து போஸ்டர்களில் அஜீத்தின் போட்டோ இருந்தது. அதன் பிறகு தான் மிரட்டல் கஜினியாகி அதில் சூர்யா நடித்தார்.

காக்க காக்க
காக்க காக்க படத்திற்காக கௌதம் மேனன் அஜீத்தை தான் முதலில் அணுகியுள்ளார். அதன் பிறகு விக்ரமிடமும் கேட்டுள்ளார். இறுதியில் சூர்யாவை நடிக்க வைத்துள்ளார்.

முதல்வன்
முதல்வன் படக்கதையை ஷங்கர் ரஜினியை மனதில் வைத்து எழுதியுள்ளார். ஆனால் ரஜினி நடிக்க மறுக்க ஷங்கர் விஜய்யை நடிக்குமாறு கேட்டார். அரசியல் என்பதால் விஜய்யும் மறுக்க அர்ஜுன் நடித்தார்.

ஐ
ஐ படத்தில் ரஜினியை நடிக்க வைக்க நினைத்துள்ளார் ஷங்கர். இறுதியில் விக்ரம் நடித்துள்ளார்.

கோ
கே.வி. ஆனந்த் தனது கோ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் சிம்பு விலக அந்த படத்தில் ஜீவா நடித்தார்.

தீனா
தீனா படத்தில் நடிக்குமாறு அப்போது புதுமுக இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை தான் கேட்டுள்ளார். அதன் பிறகு அந்த படம் அஜீத்திடம் சென்றுள்ளது. புதுமுக இயக்குனராக இருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து நடிக்க ஒப்புக் கொண்டார் அஜீத்.

நான் கடவுள்
பாலா தனது நான் கடவுள் படத்தில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது நடக்காமல் போக அதில் ஆர்யா நடித்தார்.


Click it and Unblock the Notifications











