தியேட்டர்கள் கிடைக்காததால் சிக்கல்... ரிலீஸ் தள்ளிப்போகும் படங்கள்!

By Vignesh Selvaraj

சென்னை : இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் இருப்பதால், முழுமையாகப் பணிகள் முடிந்த பல படங்களை இந்த மாதத்திலேயே வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வாரத்தில் மட்டும் முதலில் ஒன்பது படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், தியேட்டர் கிடைக்காததால் சில படங்கள் ரிலீஸிலிருந்து விலகியிருக்கின்றன.

மாயவன், அருவி, பிரம்மா.காம், சென்னை 2 சிங்கப்பூர், இமை, கிடா விருந்து, பள்ளிப் பருவத்திலே, பஞ்சு மிட்டாய், வீரா ஆகிய 9 படங்கள் இந்த வாரம் வெளிவருவதாக இருந்தன.

ஒன்பது படங்கள் ரிலீஸ்

ஒன்பது படங்கள் ரிலீஸ்

இந்த வருடத்தின் இறுதி நெருங்குவதையொட்டி, இந்த வார ரிலீஸுக்கு ஒன்பது படங்கள் தயாராக இருந்தன. அவற்றில் சி.வி.குமார் இயக்கும் 'மாயவன்' படம் வியாழக்கிழமையான இன்று வெளியாகி இருக்கிறது.

மூன்று படங்கள் பின்வாங்கல்

மூன்று படங்கள் பின்வாங்கல்

நாளை வெளிவருதாக இருந்த எட்டு படங்களில் தற்போது போட்டியிலிருந்து மூன்று படங்கள் விலகியுள்ளன. ம.கா.பா. ஆனந்த், நிகிலா நடிக்கும் 'பஞ்சு மிட்டாய்' படம் நாளை வெளிவராது என தயாரிப்பு தரப்பில் அறிவித்துவிட்டார்கள். அடுத்த வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கிருஷ்ணா படம் தள்ளிவைப்பு

கிருஷ்ணா படம் தள்ளிவைப்பு

கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள 'வீரா' படத்தை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைத்துவிட்டார்களாம். புதுமுகங்கள் நடிக்கும் 'இமை' படமும் நாளை வெளிவரவில்லை. முன்னர் அறிவிக்கப்பட்ட ஒன்பது படங்களில் இப்போது ஆறு படங்கள் மட்டுமே வெளிவருகின்றன.

குறைந்த தியேட்டர்கள்

குறைந்த தியேட்டர்கள்

இவற்றில் பல படங்கள் குறைந்த அளவிலான தியேட்டர்களில் மட்டுமே வெளியாகின்றன. அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர்களால் சிக்கல்

தியேட்டர்களால் சிக்கல்

'அருவி' படம் தியேட்டர் ரைட்ஸ் விற்கப்படாததால் பல நாட்களாக இழுத்துக்கொண்டே சென்று இப்போது ரிலீஸ் ஆக இருக்கிறது. விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற அருவி படத்திற்கும் குறைவான தியேட்டர்களே கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X