இமைக்கா நொடிகள், 60 வயது மாநிறம், அண்ணனுக்கு ஜே, ஆருத்ரா.. இன்று 4 படங்கள் ரிலீஸ்!
தமிழ் சினிமாவில் இன்று நான்கு முக்கிய படங்கள் ரிலீசாகின்றன.
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வாரம் நான்கு முக்கிய படங்கள் ரிலீசாகின்றன.
ஆகஸ்ட் மாத இறுதி வாரமான இன்று நான்கு தமிழ்ப் படங்கள் ரிலீசாகியுள்ளன. நயன்தாராவின் இமைக்கா நொடிகள், பா.விஜய்யின் ஆருத்ரா, ராதா மோகனின் 60 வயது மாநிறம் மற்றும் அட்டக்கத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே என இன்று ரிலீசாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவை.

இதில் இமைக்கா நொடிகள் நேற்றே ரிலீசாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் அப்படம் ரிலீசாகவில்லை. எனவே, இன்று அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
இப்படம் சைக்கோ திரில்லர் கதைக்களம் என்பதாலும், ஏற்கனவே அறம் படத்தில் கலெக்டராக நடித்திருந்த நயன், இப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருப்பதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.
இதேபோல், ராதா மோகனின் 60 வயது மாநிறம், அட்டக்கத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே மற்றும் பா.விஜய் நடித்துள்ள ஆருத்ரா படம் என இவை மூன்றும் வெவ்வேறு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால், இப்படங்களும் நல்ல விதமான விமர்சனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











