'2.0'வால் வந்த விளைவு... இன்று ஒரே நாளில் ஏழு படங்கள் ரிலீஸ்!
இன்று ஒரே நாளில் ஏழு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகின்றன.
Recommended Video

சென்னை: ரஜினியின் 2.0 திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸாவதால், இன்று ஒரே நாளில் ஏழு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகின்றன.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் அடுத்த வாரம், அதாவது 29ம் தேதி திரைக்கு வருகிறது. பொதுவாக ரஜினி படம் என்றாலே பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்படும். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இன்னும் அதிகபடியான தியேட்டர்களில் திரையிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால் 2.0வுடன் வேறு எந்த படமும் ரிலீசாவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் ரிலீசுக்கு காத்திருக்கும் ஏழு சிறு பட்ஜெட் படங்கள் இன்று ஒரே நாளில் ரிலீசாகின்றன.
நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் செய், விதார்த் நடித்துள்ள வண்டி, சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்குமார் ஹீரோவாக அறிமுகமாகும் கரிமுகன் ஆகிய படங்கள் இன்று திரைக்கு வருகின்றன. இந்த படங்களுடன், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பட்டிணப்பாக்கம், செம்மரியாடு, சகவாசம் ஆகிய படங்களும் ரிலீசாகின்றன.
இந்த ஏழு படங்களில் விதார்தின் வண்டி மற்றும் நகுலின் செய் ஆகிய படங்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் தீபாவளிக்கு ரிலீசான விஜய்யின் சர்கார், கடந்த வாரம் ரிலீசான காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா உள்ளிட்ட படங்கள் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதனால் இன்று ரிலீசாகும் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அப்படியே தியேட்டர் கிடைத்தாலும், அது நல்ல தியேட்டராக, சரியான காட்சியாக அமைந்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications











