ஓடிடியில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் எதிர்பார்ப்பை கூட்டிய திரைப்படங்கள்... குஷியில் ரசிகர்கள்!

சென்னை : சிறிய திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் மட்டுமே ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இப்போது பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

Recommended Video

தொழில் சுதந்திரம் எங்களுக்கு உண்டு! பாரதிராஜா சூரியாவிற்கு சப்போர்ட்

அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் க/பெ.ரணசிங்கம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் அடுத்தடுத்த வெளியாக உள்ளது.

அதேபோல தெலுங்கிலும் விஜய் ராம் மற்றும் ராஜ் தருண் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த திரைப்படங்களும் இப்போது அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

ஓடிடி தளங்களில்

ஓடிடி தளங்களில்

கொரானா நோய்த்தொற்று பரவலின் அச்சத்தின் காரணமாக திரையரங்குகள் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக முற்றிலும் மூடப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்கள் பலவும் திரையரங்குகளில் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு உள்ளாகி இருக்கின்ற நிலையில் ஒரு சில திரைப்படங்கள் இப்பொழுது ஒவ்வொன்றாக ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

திரையில் கண்டுகளிக்க

திரையில் கண்டுகளிக்க

அந்த வகையில் தமிழில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இப்பொழுது, ரசிகர்கள் பலரும் திரையில் கண்டுகளிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் "சூரரைப்போற்று" திரைப்படமும் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் "க/பெ.ரணசிங்கம்" என்ற திரைப்படமும் இப்போது ஓடிடியில் வெளியாகிறது.

இரு மொழிகளில்

இரு மொழிகளில்

அவ்வாறு வெளியாகும் திரைப்படங்களான "க/பெ.ரணசிங்கம்" வருகின்ற அக்டோபர் மாதம் 2ம் தேதியும், சூரரைப்போற்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 30ம் தேதியும் வெளியாக உள்ளது.

ஒரே புஜ்ஜிகா

ஒரே புஜ்ஜிகா

அதேபோல் தெலுங்கிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விஜய் ராம் நடிப்பில் உருவாகி இருக்கும் "அமரம் அகிலம் பிரேமா" என்ற திரைப்படம் செப்டம்பர் 18-ம் தேதியும் மற்றும் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியிருக்கும் கலகலப்பான காதல் காமெடி திரைப்படமான "ஒரே புஜ்ஜிகா" திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதியும் வெளியாக உள்ளது.

பலரும் ஆவலுடன்

பலரும் ஆவலுடன்

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்க இந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அடுத்தடுத்த திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏக்கத்தில் ரசிகர்கள்

ஏக்கத்தில் ரசிகர்கள்

ஒருபுறம் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் மறுபுறம் ரசிகர்கள் பலரும் திரையங்குகளில் தங்களது ஹீரோக்களின் திரைப்படங்களை பார்த்து ஆரவாரமாக கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X