மிமிக்ரி கலைஞர் வாழ்க்கையை மையமாக வைத்து வரும் மொழிவது யாதெனில்!
மிமிக்ரி கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து மொழிவது யாதெனில் என்ற படம் உருவாகிறது. இதில் தேஜ் பல குரல் பேசும் கலைஞராக நடிக்கிறார்.
'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தேஜ். முதல் படத்திலேயே பலரது பாராட்டைப் பெற்ற இவர் அடுத்ததாக நடித்தப் படம் 'காந்தம்'.

காதலுக்கு மரணமில்லை
மேலும் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'காதலுக்கு மரணமில்லை' படத்திலும் தேஜ் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படம் தான் தேஜ் நடித்த முதல் படம். இப்படம் வெளியாகும் முன்பே, தேஜின் நடிப்பு திறமையைப் பார்த்து பல படங்களின் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.

விண்ணைத் தொடு
அந்த வகையில், தற்போது தேஜ் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'விண்ணைத் தொடு'. இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துவிட்டது. மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

மொழிவது யாதெனில்
இதற்கிடையில், தேஜ் புதிய படம் ஒன்றில் முழுக்க முழுக்க மாறுபட்ட, இதுவரை எந்த ஹீரோவும் ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'மொழிவது யாதெனில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் தேஜ் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக நடிக்கிறார்.

மிமிக்ரி பயிற்சி
இதற்காக அவர், பலரது குரலில் பேசுவதற்காக பல நாட்கள் பயிற்சி மேற்கொண்டு நடிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் குரலில் மட்டும் இன்றி, அவர்கள் பேசும் போது அவர்களது பாடி லேங்வேஜ் எப்படி இருக்கும், போன்ற விஷயங்களையும் உண்மையான மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுடன் பழகி, நுணுக்கமாக அறிந்து வருகிறார் தேஜ், இப்படத்தில் மிமிக்ரி என்ற விஷயத்துடன், அதிரடியான சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இப்படத்தை தயாரிக்கும் மாணிக்கவாசன், ஒரு கராத்தே வீரர் என்பதால், ஆக்ஷன் படத்தை தயாரிக்க ஆர்வமாக இருந்துள்ளார். இப்படத்தை கோபால் இயக்குகிறார்.

விரைவில் இசை
அந்த வகையில் 'மொழிவது யாதெனில்' படத்திற்குப் பிறகு தேஜ், மாஸ்டர் மகேந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'விரைவில் இசை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதையும், தேஜின் கதாபாத்திரம்யும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications