சினிமாவில் உள்ள சுயமரியாதைக்காரர் சத்யராஜ் - கனிமொழி புகழாரம்
சென்னை: மக்களவை உறுப்பினர் கனிமொழி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், சுயமரியாதைக்காரராக வாழ்வது கடினம். அதிலும் திரைத்துறையில் சுயமரியாதைக்காரராக வாழ்வது மிகமிகக் கடினம். அப்படியான நிலையில் திரைத்துறையில் சுயமரியாதைக்காரராக நடிகர் சத்யராஜ் திரைத்துறையில் வாழ்ந்து வருகின்றார் என பேசியுள்ளார்.
தலைநகர் சென்னையில் உள்ள வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளமான “ பெரியார் விஷன் (PERIYAR VISION – (Everything for everyone)” என்ற ஓடிடி தளத்தின் தொடக்க விழா இன்று அதாவது ஜூலை 21ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, திரைப்பட நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்ய ராஜ் பேசுகையில், “ உலகம் முழுவதும் உள்ள கார்பரேட்காரர்கள் Stress, Depression என்பதை வைத்து தான் பணம் சம்பாதித்துக் கொண்டு உள்ளார்கள். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதி பற்றி தான் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. வட மாநிலத்தவர்கள் கனிமொழி வெற்றி பெறக் கூடாது என்று நினைத்து தூத்துக்குடி தொகுதி மீது அதிக கவனம் செலுத்தினார்கள். கனிமொழி வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் பேச்சுகள் மூலம் பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கின்றார் என்பதால், கனிமொழி வெற்றி பெறுவது பொய்யாக இருக்கக் கூடாதா என்று தான் அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.
பிரச்னை: சென்சார் போர்டு என்பது பராசக்தி காலத்தில் இருந்து பெரும் பிரச்னையாக இருந்து வருகின்றது. பராசக்தியில் வெட்டப்பட்ட வசனங்கள் அளவில்லாதவை. அதேபோல் அன்பே வா படத்தில் இடம்பெற்ற ”உதயசூரியன் பார்வையிலே விழித்துக் கொண்ட வேளையிலே” என்ற பாடல் வரிகளை புதிய சூரியன் என மாற்றப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்திலிருந்தே சென்சார் போர்டு பிரச்னை இருந்து வருகிறது.
பெரியார் படம்: பெரியார் படத்தை டிஜிட்டலைஸ் செய்துள்ளார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். அந்தப் படத்தினை இப்போது வெளியிட்டாலும் பரபரப்பாகும் என்ற பயம் பலருக்கு உள்ளது. பெரியார் வழிவந்த எங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் தான் நன்றாக இருக்கும். நாங்கள் எதிர்ப்பில் தான் வளருவோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விட தற்போதுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேகமானவராக இருக்கின்றார்.
பெரியார் விஷன் ஓடிடி: அமேசான், நெட்பிலிக்ஸ் ஓடிடி தளங்களைப் போல ப்ளே ஸ்டோரில் எளிமையாக பெரியார் விஷன் ஓடிடி தளத்தை பதிவிறக்கம் செய்து, சப்ஸ்கிரைப் செய்து சந்தா கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். இந்த மாதம் இறுதி வரை அதாவது ஜூலை 31 வரை 2 ஆண்டுகள் சிறப்பு சலுகை சந்தா கட்டணம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓடிடி தளத்தில் குறும்படங்களும் ஆவணப் படங்களும் உள்ளன. 2000 வீடியோக்கள் வரை உள்ளன” என சத்யராஜ் பேசினார்.
சுயமரியாதைக்காரர்: அதன் பின்னர் பேச வந்த மக்களவை உறுப்பினர் கனிமொழி சத்யராஜ் பெயரைக் குறிப்பிடுகையில், “ சுயமரியாதைக்காரராக வாழ்வது கடினம். அதிலும் திரைத்துறையில் சுயமரியாதைக்காரராக வாழ்வது மிகமிகக் கடினம். அப்படியான நிலையில் திரைத்துறையில் சுயமரியாதைக்காரராக நடிகர் சத்யராஜ் திரைத்துறையில் வாழ்ந்து வருகின்றார்” எனக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார்.


Click it and Unblock the Notifications











