twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு?

    By
    |

    மும்பை: அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

    தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர், வித்யா பாலன். இந்தியில், ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    சஞ்சய் தத், சைஃப் அலிகான், நடித்த பரினீதா படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் இவர்,

    ஷெர்னி நாயகி

    ஷெர்னி நாயகி

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான, டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஷெர்னி' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

    இரவு விருந்து

    இரவு விருந்து

    இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வித்யா பாலன் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் இந்த மாதத் தொடக்கத்தில், மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    படப்பிடிப்பு ரத்து

    படப்பிடிப்பு ரத்து

    இதனால் வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இரண்டு வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப் பட்டதாம். இதனால் படப்பிடிப்பு குழுவால் வனப்பகுதிக்குள் சென்று ஷூட்டிங் நடத்த முடியவிலை. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    அமைச்சர் மறுப்பு

    அமைச்சர் மறுப்பு

    அமைச்சர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வித்யா பாலன் செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், இதைத அமைச்சர் விஜய் ஷா மறுத்துள்ளார். ‘அவர்கள்தான் இரவு விருந்துக்கு என்னை அழைத்தனர்.
    நான் இப்போது முடியாது, மகாராஷ்டிரா செல்லும்போது அவர்களை சந்திப்பேன் என்று சொன்னேன்.

    Recommended Video

    CHUBBY யாதான் சாதிச்சோம் | REWIND RAJA EP-03 | FILMIBEAT TAMIL
    தவறாக நடந்தார்

    தவறாக நடந்தார்

    இதனால் அந்த இரவு விருந்து கேன்சல் செய்யப்பட்டது. படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிடவில்லை.'என்றார். முன்னதாக, படப்பிடிப்பின் போது ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக, நடிகர் விஜய் ராஜ் மீது போலீஸில் புகார் கூறப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

    English summary
    The shooting for Vidya Balan's Sherni was suspended after she turned down MP minister Vijay Shah’s invitation for dinner, as per reports. But the Minister Refutes it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X