"முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப்பெருமை" .. சூர்யாவுக்கு எம்.பி வெங்கடேசன் வாழ்த்து!

சென்னை : ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து அவருக்கு எம்பி சு வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது அறிவிக்கப்படும் போது அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுத்தான் செல்லும். ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுக்கு ஒருசில இந்தியப் படங்கள் பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில், அந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலிலும் ஜெய்பீம் இடம் பெற்றது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு விருது கிடைக்கும் என்று நிலையில், ஜெய் பீம் இறுதிப் பட்டியலுக்குள் நுழையவில்லை. இது ரசிகர்களை கவலை அடையச் செய்தது.

MP Su venkatesan praise actor surya for his oscar member invitation

2022ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர்.

MP Su venkatesan praise actor surya for his oscar member invitation

ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் சூர்யாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல இந்தி நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில், எம்பி சுவெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் முதன் முகமாக ஆஸ்கர் அகடமி தேர்வுக்குழுவில் இடம் பெறுமாறு அழைக்கப்பட்டிருக்கிறார் திரைக்கலைஞர் சூர்யா, அவர் மனம் கொண்டிருக்கும் சமூக சிந்தனைக்கும், பொறுப்புணர்வுக்கும் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது. வாழ்த்துகள் என சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினும் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X