twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏன் மிஸ்டர் அருவி இயக்குனரே, இது உங்களுக்கே நியாயமாக இருக்கா?

    By Siva
    |

    சென்னை: அருவி இயக்குனர் அருண் பிரபுவுக்கு ஒரு கேள்வி.

    கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் 3 வயது பெண் குழந்தையை கூட பலாத்காரம் செய்து கொலை செய்யும் கொடூரன்கள் தமிழகத்தில் இருப்பது தான்.

    பச்ச மண்ணையும் காமக்கண்ணோடு பார்க்கும் கயவன்கள் நம் மத்தியில் உள்ளனர் என்பது திடுக்கிட வைக்கிறது.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    அருவி படத்தில் சொல்வதெல்லாம் சத்தியம் நிகழ்ச்சியில் அருவி கலந்து கொள்வார். தன்னை பலாத்காரம் செய்த 3 பேரையும் மன்னிப்பு கேட்குமாறு கூறுவார் அருவி. நிகழ்ச்சியை நடத்தும் பெண் அந்த 3 பேரையும் திட்டுவார்.

    வேண்டாம்

    வேண்டாம்

    நிகழ்ச்சியை நடத்தும் பெண் திட்டிய பிறகு அருவியை பார்த்து நீனும் அந்த 3 பேரையும் நல்லா திட்டுமா என்பார். ஆனால் அருவியோ வேண்டாம் அவர்கள் மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும் என்பார். இதையடுத்து ஒருவர் மட்டும் மன்னிப்பு கேட்பார்.

    எல்லாம் சரி

    எல்லாம் சரி

    சொல்வதெல்லாம் சத்தியம் நிகழ்ச்சியின் முடிவில் அந்த பாதகர்கள் மூன்று பேரும் மன்னிப்பு கேட்பது போன்று பார்க்க அருவி மன்னித்துவிடுவது போன்று காண்பித்துள்ளார் இயக்குனர்.

    தண்டனை

    தண்டனை

    அன்பால் காமக்கொடூரர்களை திருத்தும் காலத்தில் நாம் வாழவில்லை என்பதை இயக்குனர் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டையே அதிர வைத்த நிர்பயா நிலையை அருண் பிரபு மட்டும் மறந்திருக்க முடியாது. அதன் பிறகும் பிறந்த பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை பலரும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருந்தணும்

    திருந்தணும்

    பெண்களை போதைப் பொருளாக மட்டுமே பார்க்கும் காமக்கொடூரர்களை அன்பால் மன்னித்துவிடுவது அவர்களின் கொடூர செயலை ஏற்றுக் கொள்வது போன்றாகிவிடும். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுப்பது தான் சரி. இந்நிலையில் அருவி படத்தில் வரும் மன்னிப்பு காட்சியை ஏற்றுக் கொள்ளவே முடியாது மிஸ்டர் அருண் பிரபு.

    English summary
    Arun Prabhu wants to forgive even rapists in his movie Aruvi. Aruvi forgives her rapists when they say sorry. Saying Sorry won't be a solution to this issue. People feel that rapists should be hanged in public and not to be forgiven.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X