பவர் ஸ்டார்னா சும்மாவா.. பவன் கல்யாண் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய மிஸ்டர் பச்சன் டீம்!
ஹைதராபாத்: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் பெரும்பான்மையான வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தை கூட பிடிக்காத நிலையில் ஆந்திரா மற்றும் கேரளாவில் அதிக அளவில் வெற்றியை பெற்றுள்ளது. மலையாள நடிகர் சுரேஷ் கோபி தனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் குருவாயூர் கோயிலில் நடைபெற்ற அவரது மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடி வந்து ஆசிர்வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி படு தோல்வியை சந்தித்தார். தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்த பவன் கல்யாண் தனது தொகுதியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி தனது கட்சியை இரண்டாவது பெரிய கட்சியாக மாற்றியுள்ளார். அவரது ஜனசேனா கட்சி 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: பவன் கல்யாண் ஆதரவாக ராம்சரண், சிரஞ்சீவி உள்ளிட்ட டோலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து அரசியலில் பல தோல்விகளை சந்தித்து வந்த பவன் கல்யாண் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அவரது வெற்றியை தெலுங்கு திரைப்படமான மிஸ்டர் பச்சன் படக்குழுவினர் பட்டாசு வெடித்து தற்போது கொண்டாடி உள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பவன் கல்யாண் ஹாஷ்டேக் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ரவி தேஜா, பாக்கியஸ்ரீ போஸ் நடிப்பில் உருவாகி வருகிறது மிஸ்டர் பச்சன் படம்.
சினிமா பிரபலங்கள் வாழ்த்து: பவன் கல்யாணுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிதாபுரத்தின் விவசாயத் தன்மையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்காகப் பல திட்டங்களை முன்வைத்தனர். கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ரூ.20,000 நிதியுதவி, ஒன்பது மணி நேரம் தடையில்லா மின்சாரம், இலவச சோலார் பம்ப் செட் என ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து மக்களையும் அவர்களது வாக்குகளையும் கவர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











