மிருணாள் தாகூர் - தனுஷை விடுங்க.. 71 வயதில் மியா கலிஃபாவை காதலிக்கிறாரா மிஸ்டர் பீன்?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒரு பக்கம் தனுஷ் - மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர்களுக்குள் காதல் ஏதும் இல்லை என்றும் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் எல்லாம் கிடையாது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சில தகவல்களும் வெளியாகி உள்ளன.
டக்காயிட் மற்றும் சில படங்கள் விரைவில் மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது என்கின்றனர். மிருணாள் தாகூர், தனுஷ் இணைந்திருக்கும் சில போட்டோக்கள் லீக் ஆகி விட்டன என்றும் கூறி வருகின்றனர். ஆனால், இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளனர்.

இந்நிலையில், அதைவிட பெரிய டேட்டிங் வதந்தியாக மியா கலிஃபாவை மிஸ்டர் பீன் நடிகர் காதலிக்கிறார் என கிளப்பி விட்டு இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
71 வயதாகும் மிஸ்டர் பீன்: பிரபல ஹாலிவுட் நடிகர் ரோவன் அட்கின்சன் மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், உலகம் முழுவதும் அவரை மிஸ்டர் பீன் என்றே கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில், தனது 71வது பிறந்தநாளையும் அவர் கொண்டாடினார். டிவி பிரபலமான சுனேத்ரா சாஸ்திரி என்பவரை 1990ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ரோவன் அட்கின்சன் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2015ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அவருக்கு லில்லி சாஸ்திரி மற்றும் பென்ஜமின் அட்கின்சன் என ஒரு மகனும் மகளும் உள்ளனர். விவாகரத்துக்குப் பிறகு, மிஸ்டர் பீன் யாரையும் டேட்டிங் செய்ததாக வதந்திகள் ஏதும் பரவாத நிலையில், தற்போது அவர் மியா கலிஃபாவை டேட் செய்து வருவதாக போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
மியா கலிஃபாவுடன் காதல்?: உலகளவில் ஃபேமஸான காமெடி நடிகர் ரோவன் அட்கின்சன் முன்னாள் ஆபாச நடிகையான மியா கலிஃபாவை காதலித்து வருகிறார் என்றும் இருவரும் சொகுசு படகில் பிரைவேட் சந்திப்பை நடத்தியுள்ளனர் என்றும் அமெரிக்காவில் பொதுவெளியில் சுற்றித் திரிகிறார்கள் என்றும் சில போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
ஏஐ ஏமாற்று வேலை: ஆனால், மியா கலிஃபாவை மிஸ்டர் பீன் காதலிக்கவில்லை என்றும் இதெல்லாம் ஏஐ ஏமாற்று வேலை என மிஸ்டர் பீன் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மிஸ்டர் பீன் மற்றும் மியா கலிஃபா இருக்கும் புகைப்படம் ஒன்றில் அவர்களுடன் ஐன்ஸ்டீன் இருப்பதை போலவும் எடிட் செய்துள்ளனர் என நோட் பண்ணி விளாசி வருகின்றனர். இந்த ஏஐ இன்னும் என்னவெல்லாம் மோசடி செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











