twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார் விபத்தில் சிக்கிய தொழிலதிபருக்கு உதவிய மிஸ்டர் பீன்... மீட்புக்குழுவினர் பாராட்டு

    |

    ரோம்: கார்ட்டூன் மற்றும் குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான 'மிஸ்டர் பீன்' நடிகர் அட்கின்சன், விபத்தில் சிக்கிய தொழிலதிபர் ஒருவரைக் காப்பாற்றி மீட்புக் குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

    Mr Bean to the rescue: Rowan Atkinson helps man injured in car crash

    குழந்தைகளை சிரிக்கவும், அதேசமயத்தில் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கார்ட்டூன் மற்றும் தொலைக்காட்சி தொடரில் இக்கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ரோவன் அட்கின்சன்(வயது 59).

    இந்நிலையில், நேற்று நிஜத்தில் விபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றியுள்ளார் அட்கின்சன். இதனால், நேற்றைய ஊடகச் செய்திகளில் மிஸ்டர் பீனின் மனிதாபிமான உதவி தான் பெருமளவில் இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

    மீட்பு....

    நேற்று இத்தாலியில் தனது காரில் பயணம் செய்து கொண்இருந்த அட்கின்சன், சாலை ஓரத்தில் ஒரு கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக தனது காரை விட்டு இறங்கிய அட்கின்சன் விபத்து நடந்த காரினுள் சிக்கியவர்களை மீட்க உதவி செய்தார்.

    தகவல்...

    மேலும், இந்த விபத்துக் குறித்து இந்தாலிய போலீசாருக்கும் மீட்புப்படையினர்களுக்கு போன் மூலம் தகவலளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மனிதாபிமானம்...

    அதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கியது அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர் என தெரிய வந்தது. மிஸ்டர் பீன் அவர்களின் மனிதாபமானத்தை மீட்புக்குழுவினர்கள் பாராட்டினார்கள்.

    இதே போன்ற விபத்து...

    விபத்தில் சிக்கிய தொழிலதிபர் ஓட்டி வந்தது மெக்லர்ன் எப் 1 ஸ்போர்ட்ஸ் வகைகாராகும். இதே போல் ஒரு காரில் செல்லும் போதுதான், கடந்த 2011ம் ஆண்டு நடிகர் அட்கின்சனும் விபத்தில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிட தக்கது.

    English summary
    The Mr Bean star was instead one of the first to come to the rescue in Italy when the crash happened.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X