மீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Recommended Video

சென்னை : சினிமா ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய திரைப்படங்களை நாளை முதல் ரிலீஸ் செய்யவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். படத்தின் ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங், பட விழாக்கள் ஆகியவையும் நாளை முதல் துவங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாளை கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி' திரைப்படம் தமிழகத்தில் வெளியாக இருக்கிறது. வாராவாரம் மூன்று படங்கள் என்கிற அளவில் வரிசையாகப் படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கௌதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் 22-ம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பில், டைரக்டர் திரு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக ஸ்ட்ரைக் காரணமாக திரைப்பட விழாக்கள் எதுவும் நடைபெறாமல் இருந்துவந்த நிலையில், திரையுலகினர் தற்போது முழுவீச்சில் பணிகளில் இறங்கியுள்ளனர். இதனால், 'மிஸ்டர்.சந்திரமௌலி' பட இசை வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்திமுடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.


Click it and Unblock the Notifications











