காவிரி மேலாண்மை வாரியத்திற்காக பட ரிலீஸை தள்ளிப்போட்ட தயாரிப்பாளர்
Recommended Video

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன் கோவிந்த்.
48 நாட்களாக நடந்த சினிமா ஸ்டிரைக் முடிந்து இன்று தான் புதுப்படங்கள் ரிலீஸாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள மெர்க்குரி படம் இன்று ரிலீஸாகி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை புதுப்படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுமா என்று நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
மிஸ்டர் சந்திரமௌலி
உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை செய்தது போன்று மே 3ம் தேதிக்கு பிறகு மிஸ்டர் சந்திரமௌலி பட ரிலீஸ் தேதியை அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பாளர் சங்கத்திடம் கேட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கெடு முடியும் வரை படத்தை ரிலீஸ் செய்ய விரும்பவில்லை தனஞ்செயன்.
நல்ல முடிவு
தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று சிலர் தனஞ்செயனை பாராட்டியுள்ளனர்.
காவிரி
எதுக்கு சார் இப்படி ஒரு விளம்பரம். ஒருவேளை மே 3 முடிவு தெரியலைனா எப்போ தெரியுமோ அது வரை படம் வெளியிட மாட்டிங்களா. உங்க படம் மே 3 க்கு முன்னாடி வருதா? வரிசைப்படி தான் வெளியாகும்னு சொல்லி இருக்காங்க, அப்படி இருக்கும் போது நீங்க எப்படி இதை சொல்ல முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











