சமந்தாவுக்கு சவுக்கடி கொடுத்த டாக்டர்.. உயிர் போனா திருப்பிக் கொடுப்பீங்களான்னு கேட்ட மிஸ்டர் ஜிகே!
சென்னை: நடிகை சமந்தா பயன்படுத்த சொன்ன ஹைட்ரஜன் பெராக்ஸைடு எந்தளவுக்கு ஆபத்தானது. அதை பயன்படுத்தக் கூடாது என தி லிவர் டாக் எனும் ட்விட்டர் ஐடியில் மருத்துவ தகவலை சொல்லி வரும் டாக்டர் எபி பிலிப்ஸ் தொடர்ந்து சொல்லி வந்தாலும், தன்னுடைய டாக்டர் தான் சூப்பர் ஸ்டார் என நடிகை சமந்தா தொடர்ந்து தவறான மருத்துவ குறிப்புகளை பகிர்ந்து வருகிறார் என மிஸ்டர் ஜிகே தனது வீடியோவில் விவரமாக சமந்தா செய்த தவறுகளை அடுக்கியுள்ளார்.
மாற்று மருத்துவத்தை நாட வேண்டும் என 3.5 கோடி ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களாக கொண்டுள்ள சமந்தா அமெரிக்காவின் ஆஸ்துமா ஆராய்ச்சி கழகம் தடை செய்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைஸரில் பயன்படுத்தி சுவாசித்தால் சாதாரண வைரல் ஃபீவர் போய் விடும் என்றும் தேவையில்லாமல் பழைய மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துவது தவறான செயல் என மிஸ்டர் ஜிகே எனும் யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை ஜூவாலா கட்டா கேட்டது போலவே மாற்று மருத்துவத்தின் மூலம் நோயாளிகள் யாராவது உயிரிழந்தால் அதை உங்களால் கொடுக்க முடியுமா சமந்தா? என மிஸ்டர் ஜிகேவும் தனது வீடியோவில் கேள்வி எழுப்பி உள்ளார்.
திடீர் டாக்டரான சமந்தா: மயோசைட்டிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு சினிமா வாய்ப்புகளை அதிகளவில் இழந்த நடிகை சமந்தா மீண்டும் அதிலிருந்து குணமாகி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கோடி செலவு செய்து தான் கற்றுக் கொண்ட மாற்று மருந்துகளின் பலன்களை சாதாரண மக்களுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன் என அவர் பதிவிட்ட போஸ்ட்டுகள் அவருக்கு எதிராக மாறி விட்டன.
சமந்தா டாக்டர்களுக்கும் ஆப்பு: தி லிவர் டாக் என சோஷியல் மீடியாவில் மருத்துவ குறிப்புகளை கூறி வரும் மருத்துவர் எபி பிலிப்ஸ் சமந்தாவின் பதிவை கண்டித்து அவரை கைது செய்ய வேண்டும் என்றே பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தனது டாக்டர்கள் சூப்பர் ஸ்டார் என டாக்டர் மித்ரா பாசு சில்லர் தான் இந்த மருத்துவத்தை தனக்கு பரிந்துரைத்தார் என சமந்தா ஷேர் செய்ய, தடை செய்யப்பட்ட ஓஜோன் தெரபி உள்ளிட்ட பல மருத்துவங்களை அவர் பயிற்சி செய்து வருகிறார் என்றும் சமந்தா அவரை விட்டு விலகி நல்ல மருத்துவர்களை நாடுவதே சிறந்தது என்றும் இன்னொரு நபர் டாக்டரே இல்லை அவர் ஒரு நேச்சுரோபதி நிபுணர் என இருவர் பற்றியும் போட்டு விளாசி விட்டார் டாக்டர் பிலிப்ஸ்.
உயிர் போனா கொடுப்பீங்களா?: நடிகை சமந்தா ஏன் திடீரென மருத்துவ குறிப்புகளை எல்லாம் கொடுத்து சிக்கலில் சிக்கிக் கொள்கிறார் என்கிற கேள்வி சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவால கட்டா மாற்று மருத்துவத்தை முயற்சிக்க சொல்லும் நடிகர்கள் நோயாளிகளின் உயிர் போனால் திருப்பிக் கொடுப்பார்களா எனக் கேட்டிருந்தார். இந்த வீடியோவிலும் மிஸ்டர் ஜிகே அதே கருத்தை முன் வைத்துள்ளார். மருத்துவம் படிக்காத நாம், மருத்துவர்கள் சொல்லும் விஷயத்தை அதிக ஃபாலோயர்கள் இருப்பதால் ஷேர் செய்து ஏன் சிக்கலில் சிக்க வேண்டும் என்றே பலரும் சமந்தாவுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். ஒரிசா பாலு என்பவர் சமீபத்தில் உயிரிழக்கவே ஹைட்ரஜன் பெராக்ஸைட் பயன்பாடு தான் காரணம் என்றும் மிஸ்டர் ஜிகே தனது வீடியோவில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











