மிஸ்டர் லோக்கல்: சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடியாக உள்ளதே!
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
முதல் பாதி முடிவதற்குள் பாதி உயிரே போய்விட்டது என்று தியேட்டருக்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

மிஸ்டர் லோக்கல்
மிஸ்டர் லோக்கல் படம் கொடூர மொக்கையாக உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில் அதை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். அந்த படத்தை பலரும் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர்.

வசூல்
மிஸ்டர் லோக்கல் படம் சரியில்லை என்று வெளியான விமர்சனத்தால் தியேட்டருக்கு செல்லும் முடிவில் இருந்தவர்கள் பலர் மனதை மாற்றிக் கொண்டனர். இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் செய்த காரியத்தால் மிஸ்டர் லோக்கல் படத்தின் வசூல் மேலும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

ஹீரோ
கதை சரியில்லை என்றால் சிவகார்த்திகேயன் நடித்தாலும் சரி, நயன்தாரா நடித்தாலும் சரி படத்திற்கு வரவேற்பு கிடைக்காது என்பதை மிஸ்டர் லோக்கல் உணர்த்தியுள்ளது. கதை தான் ஹீரோ என்பதால் சிவகார்த்திகேயன் படங்களை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது.

சீமராஜா
மிஸ்டர் லோக்கல் படத்தை பார்த்தவர்கள் இதற்கு சீமராஜாவே பரவாயில்லையே என்கிறார்கள். பாவம் சிவகார்த்திகேயன், தொடர்ந்து இரண்டு படங்கள் மோசமான வரவேற்பை பெற்றுவிட்டன. ஆனால் இது முடிவு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











